நண்டைச் சுட்டு நரியை ! காவல் வைத்தது போல ஆகிவிட்டது
குன்னூரில் எனக்குப் பின்னால் தெரிவது
தமிழ்நாடு தேயிலை வாரிய அலுவலகம்
அந்த கட்டிடமும் அதற்கு கீழே ஏராளமான குடியிருப்புகளும்
வக்ஃப் சொத்தில் கட்டப்பட்டுள்ளன.
நமது முன்னோர்கள் வாழ்நாள் முழுவதும்
உண்டாக்கிய சொத்துக்களில் பலவற்றை
முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக வக்ஃப் செய்தார்கள்.
அவை தான் இன்றைய வக்ஃப் சொத்துக்கள்
தமிழகம் (இந்தியா) முழுவதும் உள்ள 80 % வக்ஃப் சொத்துக்கள்
மத்திய மாநில அரசால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
நண்டைச் சுட்டு நரியை காவல் வைத்தது போல ஆகிவிட்டது
சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக சொல்லிக்கொள்ளும்
குடியரசு இந்தியாவின் சாதனைகளில் இது முக்கியமானது.
என்னையும் சேர்த்த முஸ்லிம்களின் அலட்சியம் மற்றும் அறிவின்மைக்கு இது ஒரு சான்று
இஸ்லாமிய பள்ளிகூடத்திற்கு இடம் தேடி அலையும் நிலையில்
இதை வேதனையோடும் இயலாமையோடும் காண நேர்ந்தது.
இன்ஷா அல்லாஹ் ஒரு காலம் வரும்.....
வக்ஃப் சொத்துக்களை மீட்பதற்கு.......
உச்ச நீதிமன்றத்தையும் உயர் நீதிமன்றத்தையும்
என் சமூகத்தின் சட்ட வல்லுனர்கள் உலுக்கி எடுப்பார்கள்
நன்றி முகநூலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக