கல்வியை காவிமயமாக்கும் முயற்சியை தீவிரப்படுத்தும் நோக்கில் சங்க்பரிவார் அமைப்பான சிக்ஷா பச்சாவோ அந்தோலான் மற்றும் வித்யா பாரதியின் தலைவரான தினநாத் பத்ரா தனியாக ஒரு அரசு சாரா நிறுவனத்தை துவக்கியுள்ளார்.
அரசு சாரா கல்வி கமிஷன் (என்.ஜி.இ.சி) என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ள இவ்வமைப்பின் அலுவலகம் மேற்கு டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.
பத்ரா உள்பட 31 பேர் இவ்வமைப்பில் இடம்பெற்றுள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் ப்ரோ வைஸ் சான்ஸ்லர் கபில் கபூர், ஹிமாயூன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பி.எஸ்.ராஜ்புத் ஆகியோர் இவ்வமைப்பில் இடம்பெற்றுள்ள பிரமுகர்கள் ஆவர்.மூன்று ஆண்டுகள் ஆய்வுச் செய்த பிறகு சிபாரிசுகளை அரசுக்கு சமர்ப்பிப்போம் என்று பத்ரா தெரிவித்தார்.
வேத கணிதம், பண்பாட்டுக் கல்வி, முழுமையான மனிதநேயம் ஆகிய விஷயங்களை பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பது இவ்வமைப்பின் நோக்கமாகும்.ஜலந்தரில் பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் மேற்கண்டவை போதிக்கப்படுவதாக பத்ரா தெரிவித்தார்.
இவ்வமைப்பின் செயல்பாட்டிற்காக அரசு நிதியை பெறுவதில் கருத்து வேறுபாடில்லை என்ற கொள்கையும் அவர்களுக்கு உண்டு.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக