Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

விநாயகர் ஊர்வலமா - வீண் வம்பின் விவகாரமா?

விநாயகர் ஊர்வலமா - வீண் வம்பின் விவகாரமா?
விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் கலவரத்திற்கு கத்தி தீட்டுவதை நாடு ஆண்டுதோறும் கண்டு கொண்டு இருக்கிறது.
மகாராட்டிரத்தில் திலகர் தான் இந்த விநாயகரை முன்னிறுத்தி அரசியலில் இந்துத்துவாவை ஊடுருவ விட்டவர்.
மகராட்டிரத்தில் பிளேக் நோய் பெரும் அளவில் வெடித்தபோது, ஆங்கிலேயர்கள் பிளேக் நோய்க்கு மூல காரணம் எலிகள் என்பதால், எலிகளை வேட்டையாட ஏற்பாடு செய்தார்கள்.

இந்தப் பாலகங்காதர திலகர் என்ன செய்தார் தெரியுமா? எலி - விநாயகர் வாகனம் - கிறித்துவ - மிலேச்சர்களான வெள்ளைக்காரர்கள் நமது இந்து மதத்தில் மூக்கை நுழைக்கிறார்கள்.
இந்துக் கலாச்சாரத்தில் தலையிடு கிறார்கள் என்று வெறியைக் கிளப்பினார். அதன் தீய விளைவின் உந்துதல் காரணமாக இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகளை இந்து வெறியர்கள் சுட்டுக் கொன்றார்கள். இந்த வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறை செல்ல நேர்ந்தது என்பதும் சுட்டிக்காட்டத் தகுந்தது.
திலகர் அன்று சொன்ன அந்த இந்துக் கலாச்சாரம் என்ன என்று புரிகிறதா? இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறும் இந்துக் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
இந்தச் சிறை வாசத்திற்குத் தியாகம் என்ற முத்திரை பொருந்தாது; தேசியப் போர்வையில் மதவாத விஷத்தை நுழைத்த ஒரு பிற்போக்குவாதி மீதான நியாயமான தண்டனை என்று கூறுவது பொருத்தமான தாகும்.
இந்துத்துவா சக்திகள் விநாயகர் ஊர்வலம் என்ற ஒன்றை கடந்த சில ஆண்டு காலமாகவே அரங்கேற்றத் தலைப்பட்டனர். சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவது இதன் முதன்மையான நோக்கம்; இந்து மதத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது இளைஞர்களை ஈர்ப்பது என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள இரகசியம்.
விநாயக சதுர்த்திக்கு முன்னதாகவே பல நாட்கள் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்கிறார் களாம். இதனைச் செயல்படுத்துவதற்கு ஏராளமான பணம் கொட்டப்படுகிறது.
1998ஆம் ஆண்டிலிருந்து முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழும் முத்துப் பேட் டைப் பகுதியில் காவிகள் காலித்தனத் தினைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.
அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதும் உண்டு.

2.9.2009இல் முத்துப்பேட்டையில் நடத் தப்பட்ட விநாயகர் ஊர்வலத்தின்போது ஊர்வலப் பாதையில் இருந்த பெண்கள் மேனிலைப் பள்ளி, மசூதி மற்றும் இஸ்லாமி யர்களின் கடைகள் தாக்கப்பட்டன.
அதே போல முசுலீம் அதிகமாக வாழும் சென்னை அய்ஸ்அவுஸ் பகுதியில் ஒவ் வொரு ஆண்டும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம கோபாலன் தலை மையில் ஏதோ ஒரு வகையில் கலவரத்தில் ஈடுபடுவது வாடிக்கையாகும்.
பெயரளவிற்கு அவரைக் கைது செய்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரை விடுவிப்பது என்பது கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன சங்கதியாகும்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இந்தக் கலவரம் திட்டமிட்ட வகையில் நடத்தப் பட்டே வருகிறது.
2010இல் மதுக்கூர் - தூத்துக்குடி, நாகர்கோவில், கிள்ளியூர் பகுதிகளில் பெருங்கலவரங்கள் மூட்டப்பட்டன!
2011இல் திண்டுக்கல்லிலும் கோவையி லும் கலவரங்கள் வண்ணப் பொடி என்ற பெயரில் அமிலங்கள் வீசப்பட்டதுண்டு.
2010 முதல் விநாயகர் ஊர்வல வன் முறை வழக்குகளிலிருந்த அதன் தன் மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு - 300; கருநாடகம் - 420; ஆந்திரா - 300; கேரளா - 100; கோவா - 70
இந்தியா முழுமையும் எடுத்துக் கொண் டால் ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்குகள்!
இந்தச் சூழ்நிலையில் சென்னையில் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன் றைத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கள் சஞ்சய் கிஷன்கவுல் (தலைமை நீதிபதி) சத்திய நாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு சில நிபந்தனைகளின் பேரில் அனுமதி அளித்துள்ளது.
ஏற்கெனவே இது போன்ற நிபந்தனை களை விதித்ததுண்டு. ஆனால் எந்த ஒரு நிபந்தனையையும் அந்த அராஜக வட்டாரம் பின்பற்றவில்லை; மாறாக அவற்றையெல்லாம் காலில் போட்டு மிதித்து அரட்டைக் கச்சேரிக் கூச்சல் களைப் போட்டு தலைநகரைக் கேவலத் தின் வடிவமாக மாற்றின.
மது அருந்தி ஊர்வலத்தில் செல்லக் கூடாது என்பது நிபந்தனை. மது அருந்தாத நபரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண் டும். 10 அடிக்கு மேல் சிலைகள் உயரமாக இருக்கக் கூடாது என்பது நிபந்தனை! ஆனால் 20 அடி 30 அடி உயரமுள்ள சிலை கள் டிராக்டரில் வலம் வருவது வாடிக்கை.
களி மண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட வேண்டும் என்பதும் நிபந் தனைதான். ஆனால் அவ்வாறு தான் செய்யப்படுகின்றனவா? ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றனவா? இவற்றை யார் கண்காணிக்கிறார்கள்? பரிசோத னைக்கு உட்படுத்துகிறார்கள்?
பொது இடங்களில் சிலைகளை பிர திஷ்டை செய்பவர்கள் மின்வாரியத்திலி ருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்பது நிபந்தனை! உண்மை என்னவென்றால் பெரும்பாலான இடங் களில் மின்கம்பங்களிலிருந்துதான் திருட்டு மின்சாரம் எடுக்கப்படுகிறது.
பக்தி என்றாலே ஒழுக்கக் கேடு, அராஜ கம், நேர்மையின்மை, பேராசை, சுயநலம், என்பவற்றின் கூட்டுக் கலவைதானே!
இந்த நேரத்தில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கே. சந்துரு அவர்கள் வழங்கிய தீர்ப்பும் கவனத்துக்குரியது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சாயல் குடியில் ஒன்பது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வல மாகக் கடலில் கரைப்பதற்கு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, காவல்துறை அனுமதி வழங்க மறுத்து விட்டது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது நீதிபதி கே. சந்துரு அவர்கள் பொது இடத்தில் மத நிகழ்ச்சியை நடத்திட சட்டத்தில் இடம் இல்லை. அதற்கான உரிமையை நிலை நாட்ட ஒருவருக்கு உரிமையும் கிடையாது. சூழ்நிலையைக் கருத்தில் கொண்ட ஓர் அதிகாரி அனுமதியை மறுக்கும்போது அதில் நீதிமன்றம் தலையிடவும் முடியாது; அவ்வாறு தலையிடுவது சூழ்நிலையை மோசமாக்கும் என்று தீர்ப்பளித்தார். (2007 - அக்டோபர்).

நன்றி விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக