புறமுதுகு காட்டி ஓடாதீர் . உம்மை கோழையாக பலஹீனமானவராக உதவியற்றவராக வெளிக்காட்டாதீர் . குர்ஆன் ஓதுபவர்கள் குர்ஆன்
ஓதுவதில் கவனம் செலுத்தட்டும். இஸ்லாத்தின் வருகைக்கு முன்புள்ள காலத்தைப் பற்றி யாரும் விவாதிப்பதை தவிர்த்து விடும். ஏனெனில் அது பகைமையில் கொண்டு போய் விடும். உமக்கு முன் சென்றவர்களை நீர் சந்திக்கும் வரை உலக அழகிலிருந்தும், அலங்காரங்களிலிருந்தும் தவிர்ந்து நில்லும்.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு சிலாகித்துக் கூறிய மனிதர்களுடன் இணையும். இன்னும் நம் கட்டளையைக் கொண்டு ( மக்களுக்கு ) நேர்வழி காட்டும் இமாம்களாக தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம். மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும் தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும் , ஜகாத்தை கொடுத்து வருமாறும் நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம். அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர். ( அல் அன்பியா 21 : 73 )
இவ்வாறு அம்ர் பின் அல் ஆஸூக்கு (ரலி) முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க உபதேசம் வழங்கினார்கள்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக