Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

காஸாவில் ஒரு மாதத்தில் 4500 குழந்தைகள் பிறந்துள்ளன!


ஒரு மாத காலமாக இஸ்ரேல் ஃபலஸ்தீன் காஸாவின் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி பிஞ்சுக்குழந்தைகள் உள்ளிட்ட சாதாரண
மக்களை கொலைச் செய்துவரும் வேளையில் அங்கு கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 4500 குழந்தைகள் பிறந்துள்ளன.இத்தகவலை காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பல காரணங்களால் குழந்தை பிறப்பை பதிவுச் செய்யாதவர்களும் உண்டு.ஆனால், இதுத்தொடர்பாக அமைச்சகம் சர்வே நடத்தவில்லை என்று அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இயாத் அல் போஸ் தெரிவித்தார். பதிவுச் செய்யாத குழந்தைகளையும் சேர்த்தால் 5 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிக்கூடங்கள், அகதிகள் முகாமில் தங்கியிருந்த பல கர்ப்பிணியான பெண்கள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.ஆனால், இஸ்ரேலின் கொடூர தாக்குதல் காரணமாக இவர்களால் குழந்தை பிறப்பை பதிவுச் செய்ய முடியவில்லை என்று இயாத் அல் போஸ் தெரிவித்தார்.
காஸாவில் 45 ஆயிரம் கர்ப்பிணிகள் பிரசவத்திற்கான சிகிட்சைகள் கிடைக்காமல் துயருறுவதாக ஏற்கனவே ஐ.நா அறிக்கை கூறியிருந்தது.இதன் மூலம் காஸாவில் மொத்த மக்கள் தொகை 19 லட்சத்தை தாண்டியுள்ளது.இதில் 9,47,000 ஆண்களும், 9,22,000 பெண்களும் அடங்குவர்.
2020-ஆம் ஆண்டு காஸாவின் மக்கள் தொகை 23 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் உலகிலேயே அதிகமான மக்கள் வசிக்கும் குறுகிய பகுதியாக காஸா மாறும்.இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களில் இதுவரை 1904 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 433 குழந்தைகளும் அடங்குவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக