Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

கோரிக்கையை ஏற்க்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது - ஹமாஸ்

ஃபலஸ்தீன் காஸாவின் கோரிக்கைகளை பூர்த்தியாக்காமல் இனியும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு தயாரில்லை என்று ஹமாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எகிப்து மத்தியஸ்தத்தின் பெயரில் அறிவிக்கப்பட்ட 72 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று காலை முடிவடையும் வேளையில் ஹமாஸ் இதனை தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தால் இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று ஹமாஸின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயீல் ரத்வான் அல்ஜஸீராவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தங்களுடைய உண்மையான கோரிக்கைகளை அங்கீகரிக்காமல் தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க முடியாது. இதுவரை ஹமாஸின் கோரிக்கைகளை அங்கீகரிக்க இஸ்ரேல் தயாராகவில்லை. ஆகையால் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் தயாரில்லை என்று ரத்வான் தெரிவித்தார்.
நான்கு வார காலமாக இஸ்ரேல், ஃபலஸ்தீன் காஸாவில் நடத்திவரும் கொடூர தாக்குதல்களுக்கிடையே எகிப்து மத்தியஸ்தம் வகிக்க 72 மணிநேர போர்
நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 3 தினங்களாக காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை. போர் நிறுத்தத்தை நீட்டிக்க இஸ்ரேல்
தயாராக இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டதன் பின்னர் ஹமாஸ் இதனை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதேவேளையில், எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான முயற்சி தொடருகிறது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேலின் பிரதிநிதிகளுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையை எகிப்திய பிரதிநிதிக்குழு தற்போது தொடருகிறது.
தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து காஸாவுக்கு அருகே வசித்து வந்த 10 ஆயிரம் இஸ்ரேலியர்கள் தற்போது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். காஸாவில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஐ.நா புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக