Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

மாட்டின் உரிமையாளரை தீர்மானித்த மரபணு சோதனை!- கேரளாவில் ருசிகரம்!

திருவனந்தபுரம் : பசுமாடு யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பில் கேரளாவில் நடைபெற்றுவரும் ஒரு சர்ச்சையான வழக்கில், அந்த பசுமாட்டின் மரபணு சோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன.
கீதா என்ற பெண்மனி தன்னுடைய பசுமாட்டை தன்னுடைய அண்டை வீட்டாரான சஷிலேகா திருடியதாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் தற்போது மரபணு முடிவுகளின்படி அந்த குறிப்பிட்ட பசுமாடு சஷிலேகாவின் பசுவே என்று தெரியவந்துள்ளதை அடுத்து, அவரே இந்த வழக்கில் வெற்றி பெறவுள்ளார் என்று சஷிலேகாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த பசு மாடு உரிமைத் தகராறு தொடர்பிலான வழக்கில் பசு மாடு நீதிமன்றத்திற்கு கூட கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் பசுமாடுகளின் உரிமை தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
தனது பண்ணையிலுள்ள மாட்டின் கன்றுதான் அண்டை வீட்டில் வளர்க்கப்படும் இந்த குறிப்பிட்ட பசுமாடு என்று கீதா நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார். ஆனால் அந்த பசுவை வளர்த்தவரோ தனது பசுமாடு கீதாவின் பண்ணையில் இருந்து வந்த கன்றல்ல என்று மறுப்பு தெரிவித்தார்.
இந்த சிக்கலை விஞ்ஞான ரீதியில் தீர்க்க முயன்ற நீதிமன்றம் இந்த குறிப்பிட்ட பசுவிடம் மரபணு பரிசோதனை செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. அந்த மரபணு பரிசோதனை முடிவின்படி கீதாவின் பண்ணையில் இருக்கும் பசுமாடுகளுக்கும் சஷிலேகாவின் பசுமாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. எனவே தற்போது இந்த குறிப்பிட்ட பசுமாடு சஷிலேகாவிடமே தொடர்ந்து இருக்கும் என்று தெரிகிறது.
தன் மீது அபாண்டமாக புகார் அளித்த கீதாவிடமிருந்து இழப்பீடு பெற திட்டமிட்டுள்ளதாக சஷிலேகாவின் வழக்கறிஞர் சந்திர பாபு பிபிசியிடம் தெரிவித்துள்ளார். சஷிலேகாவை தேவையற்ற மன வேதனைக்கு ஆளாக்கிய காரணத்திற்காக கீதாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் வழக்கறிஞர் சந்திர பாபு கூறினார்.
நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வரப்பட்ட அந்த பசுமாட்டை சஷிகலா மீண்டும் தன் வீட்டுக்கு கூட்டிச்செல்ல நீதிமன்றத்திற்கு ரூபாய் 45,000 பாதுகாப்பு தொகை செலுத்த வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக