Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

காயல்பட்டினத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயிலும், கோட்டைச் சுவரும் அகற்றம்! பொதுமக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

காயல்பட்டினம் – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் கே.எம்.டி. மருத்துவமனைக்கு அருகிலுள்ள சாலையோரத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென கோவில் ஒன்று முளைத்தது. இது குறித்த சர்ச்சை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், கடந்த 22.08.14 வெள்ளியன்று நள்ளிரவு அதன் ஓலைக் கூரை கட்டுமானம் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையில் ஹாலோ ப்ளாக் கற்கள் கொண்டு ஒரு சிலர் உடனடியாக கோயிலைக் கட்டியுள்ளனர். தகவலறிந்து காவல்துறையினரும் நிகழ்விடம் வந்து குவிந்தனர். எனினும் கட்டிடப் பணிகள் உடனடியாக நிறுத்தப்படவில்லை.
இதனைக் கண்டித்து, நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினம் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள், அடைக்கலாபுரம் வழியாக திருப்பி விடப்பட்டன.
பொதுமக்களின் போராட்டம் வீரியம் அடைந்ததும், இரு தரப்பிலும் ஆறு பேர் அழைக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா. துரை தலைமையில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை 11.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நிறைவில், “காயல்பட்டினம் நெடுஞ்சாலைத் துறை புறம்போக்கில் அமைந்துள்ள மாவு இசக்கியம்மன் கோவில் மற்றும் திரு. வாவு செய்யது அப்துல் ரஹ்மான் என்பவர் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள மதில் சுவரையும், நெடுஞ்சாலைத் துறை மூலம் இன்றே அகற்றிட கீழே கையொப்பமிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது” என ஒப்பந்த வாசகம் வடிவமைக்கப்பட்டு, இரு தரப்பினரும் அதன் கீழ் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தப் படி, நேற்று மாலை 4.00 மணியளவில், திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவன் தலைமையில், நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவிப் பொறியாளர் திருவேங்கட ராமலிங்கம் முன்னிலையில் நிகழ்விடத்தில் ஆக்கிரமிப்புகள் முறைப்படி அளக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, மாலை 4.15 மணியிலிருந்து 5.15 மணி வரை, ஆக்கிரமிப்பிலுள்ள கோட்டைச் சுவர் மற்றும் கோயில் ஆகியன முற்றிலும் இடித்து அகற்றப்பட்டன.

பதட்டம் துவங்கியதிலிருந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் வரை, நிகழ்விடத்தைச் சுற்றி, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக