இஸ்லாமிய மறுமலர்ச்சியின் இயக்கவியல்
வரலாறுகளில் இஸ்லாம் எங்கே நிற்கின்றது? சமூக அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் இஸ்லாத்தின் பங்களிப்பு என்ன? அதன் பலன் என்ன? கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சி அல்லது பின்னடைவுக்கு காரணங்கள் என்ன? அது ஐரோப்பிய நாகரீகத்தை சார்ந்துள்ளதா?
இதனைப் பற்றி சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.
வரலாற்றில் அதன் காலவரையை அல்லது காலத்தை மிகத் துல்லியமாக குறிப்பிடுவது என்பது மிகக் கடினமானது. இருப்பினும் சில காலங்கள் மூலம் வரலாற்று நிகழ்வுகளை நாம் கண்டுபிடிக்கலாம், அவற்றுள் 1492 மற்றும் 1498 ஆகிய ஆண்டுகளும் அடங்கும். கொலம்பஸ் தன்னுடைய பயனத்தை 1492 ஆண்டு தொடங்கினார், அதே போல் வாஸ்கோடகாமா தனது பயணத்தை 1498 ஆம் வருடம் தொடங்கினார். கடல் மார்க்கமாக அவர்கள் மேற்கொண்ட பயணங்கள் தான் ஒரு சகாப்தத்தின் ஆரம்பம் என்று கூறிவிட முடியாது. எனினும் 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியாவில் சில அடிப்படை மாற்றங்கள் ஏற்ப்பட்டன. அவற்றுல் முக்கிய சமூக அரசியல் மாற்றங்களில் ஒன்றுதான்/ குறைந்துவந்த கத்தோலிக திருச்சபையின் செல்வாக்கு மற்றும் மொழி அடிப்படையிலான தேசியவாதத்தின் தோற்றமாகும்.
கத்தோலிக திருச்சபை என்பது ஒரு செல்வாக்கு மிகுந்த, பழமைவாய்ந்த மற்றும் வலுவான மத அமைப்பாக விளங்கியது. ஒரு மன்னருக்கு மக்களிடைய ஆதரவு வேண்டும் என்றால், அந்த மன்னருக்கு கத்தோலிக திருச்சபையின் ஆசிர்வாதம் தேவைப்பட்டது. ஒரு மன்னரை கத்தோலிக திருச்சபை புறக்கணித்தால், மக்கள் அந்த மன்னரை பதவியிலிருந்து நீக்கிவிடுவது மட்டுமின்றி, சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த மன்னரை கொலையும் செய்தும் விடுவார்கள். Pope - பிற்கு அப்படியொரு செல்வாக்கு இருந்தது. போப் கிரிகொரி VII, ஃபிரஞ்ச் மன்னரான ஹென்ரி IV –ரை திருச்சபையில் இருந்து வெளியேற்றினார். மன்னர் ஹென்ரி IV ஏழு மாதங்கள் போராடி இறுதியாக பாதிரியார்கள் வசிக்கும் கனோசா என்ற இடத்தை வந்தடைந்தார். அங்கு அவர் பாதிரியாரிடம் பேச வாய்ப்பு கிடைக்கும் வரை/ கடுங்குளிரில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் காத்துக்கொண்டிருத்தார். இறுதியாக அவர் மீண்டும் திருச்சபையில் சேர்க்கப்பட்டார். இவ்வாறு மன்னரான ஹென்ரி IV – ன் ஆட்சி சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இதுதான் அந்த காலகட்டத்தில் திருச்சபையின் செல்வாக்காகும்.
இந்த சகாப்தங்களுக்கு தொழிற்புரட்சி ஒரு முடிவைக் கொண்டுவந்தது. தொழிற்புரட்சி என்பது 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டின் ஒரு பிரளய நிகழ்வு. மனித திறனை அதிகரிக்கும் சாதாரண கருவிகளுக்கு மாற்றாக முதல் முயற்சியாக இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் மிகுந்த ஆச்சரியம் மிகுந்ததாக அமைந்தது. நூல் திரிப்பில் பயன்படுத்தப்பட்ட சக்கரங்களுக்குப் பதிலாக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நீரினால் இயங்கும் இயந்திர தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. ரயில்களை நீராவியினால் இயக்கலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டன. மனித வரலாற்றில் நீராவி இயந்திரத்தின் பங்களிப்பு மிகவும் அற்புதமானது. 10 நபர்கள் ஒருநாளைக்கு 50 நூல்திரிப்புகளை நெசவுனால், ஒரு இயந்திரம் ஒரு நாளைக்கு 100 நூல் திரிப்புகளை நெசவும். இதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில் தான் கவலைகள் தொடர்ந்தன. இந்த பொருட்களை கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்ட போது தான் ஏற்றுமதி துவங்கப்பட்டது. ஏற்றுமதி செய்வதற்கு தடைகள் பல வந்த போதிலும் அக்கறையுடன் அவற்றை சமாளிக்கும் முயற்சிகளும் தொடர்ந்தன. ஏற்றுமதிகாக மற்ற நாடுகளை கைப்பற்றுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்தது. இந்த நிலை காலனியாதிக்கத்திற்கு வித்திட்டது. இவ்வாறு தான் பிரிட்டிஸார்கள் உலகத்தை ஆட்சி செய்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் உலகத்தில் 80% நிலப்பரப்புகள் பிரிட்டிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதுதான் முதலாளித்துவத்தின் விரிவாக்கத்தையும், சந்தைகளையும் ஊக்கவித்தது. முதலாளித்துவம் என்பது இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. அதிக மூலதனம், அதிக மூலப்பொருட்கள், அதிக சந்தைகள் தொழிற்சாலைகளுக்கு தேவைப்பட்டன. இத்தகைய பெரிய மூலதனத்தை தனி நபரால் மூதலீடு செய்ய முடியாது. இவை கூட்டு பங்கு நிறுவனங்கள் மற்றும் குறைந்த கடன் வழங்கும் நிறுவனங்களின் வருகைக்கு வித்திட்டது. அதாவது ஒருவர் முதலீடு செய்யும் பணத்திற்கான கடன் தொகைக்கு மட்டும் தான் அவர் பொறுப்பேற்க முடியும், நிறுவனங்கள் அடையும் கடனிற்கு அந்த தனி நபர் பொறுப்பெற்க முடியாது). இந்த புதிய வணிக மாதிரி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது. கூட்டு பங்கு நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட பின் அதிக அளவிலான பணங்கள் வர ஆரம்பித்தன. இதன் மூலம் தான் கிழக்கிந்திய நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இது கத்தோலிக திருச்சபையின் செல்வாக்கை பலவீனமாக்கியது. அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் திருச்சபைகளுக்கு மாற்றாக அமைந்தது.
தேசியவாதத்தின் வெளிப்பாடு:
படிப்படியாக ஐரோப்பிய நாடுகள் வலிமையாகின மற்றும் கத்தோலிக திருச்சபையின் ராணுவம் வலிமை இழந்து வந்தது. மொழிகளின் அடிப்படையில் மக்கள் திரட்டப்பட்டனர். ஜெர்மன் மொழி பேசும் மக்களுக்கு தனி நாடு, ஆங்கிலம் மற்றும் ஃபிரஞ்ச் மொழி பேசும் மக்களுக்கு தனி நாடு, இத்தாலி மொழி பேசும் மக்களுக்கு தனி நாடு, போர்ச்சிகீஸ் மொழி பேசும் மக்களுக்கு தனி நாடு. இவ்வாறு தான் தேசியவாதம் வெளிப்பட்டது. தேசியவாதம் என்பது ஒரு நாட்டு மக்கள் தாங்கள் தான் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்று எண்ணுவதாகும், பாகிஸ்தானியர்களை விட இந்தியர்கள் சிறந்தவர்கள் என்பதைப் போல. ஆனால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் எவ்வித வித்தியாசங்களும் இல்லை. இருநாடுகளும் பொதுவான மானுடவியல் பங்கில் பெரிதும் ஈர்க்கப்படுகின்றது, இரண்டு நாடுகள் பிற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒருவர் தங்களை விட மற்றவர்கள் மோசமானவர்கள் என்று நினைக்கின்றனர்.
ஆனால் அவர்கள் பேசும் மொழிகள் ஆங்கிலேயேர் மற்றும் பிரஞ்ச்சுகாரர்களின் மொழிகளை ஒத்தே இருக்கின்றன, இருப்பினும் அவர்கள் மேலாதிக்கம் இல்லாத மொழி அல்லது இனத்தை மிதக்கும் நிலையில் வைப்பதன் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
கிழக்கிந்தியா நிறுவனங்கள் வணிகத்திற்காக இந்தியாவிற்குள் வந்தனர். அவர்கள் சூரத்திற்கு வந்த போத் ஜஹாங்கீர் தான் முகலாய மன்னராக இருந்தார். 17 ஆம் நூற்றாண்டில் சார் தாமஸ் ரோ வருகை புரிந்தார். இந்தியாவில் பொருட்களை வாங்க மன்னர் ஜஹாங்கீரிடம் தாமஸ் ரோ அனுமதி கேட்டார். மன்னரிடம் அவர்களுக்கு அனுமதி கிடைத்தும் தங்களது கிடங்குகளை சார் தாமஸ் ரோ அங்கு அமைத்தார். இதுதான் ஆரம்பம்.
பிரிட்டன், ஐரோப்பியாவின் கிழக்கு பகுதியில் 5 முதல் 6 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இருக்கும் ஒரு சிரிய நாடு. சார் தாமஸ் ரோவிற்கு முகலாய தர்பார், ஒப்பிடமுடியாத சிறப்புடையதாகவும், மாட்சிமைமிகுந்ததாகவும் இருந்தது. மொத்த இங்கிலாந்தையும் நமது செங்கோட்டைக்குள் அடக்கிவிடலாம்.
பிளச்சி போர் 1757 ஆம் வருடம் நடைபெற்றது. ராபர்ட் கிளேவ் சீராஜித்தவ்ளாத்தை தோற்க்கடித்தார். அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்து இதனை சாதித்தார் ராபர்ட் கிளேவ். இதன் மூலம் கொல்கத்தா பிரிட்டீஸாரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது, அதனை தொடர்ந்து படிப்படியாக மொத்த நாட்டையும் பிரிட்டீஸாட் ஆட்சின் செய்தனர். மிகக் குறைந்த செலவில் மூலப் பொருட்களை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் இந்திய நாட்டிலேயே செய்யப்பட்டன. இன்னொரு புரம் பிரிட்டீஸாருக்கு எதிரான எண்ணங்கள், கருத்தியல் மற்றும் நம்பிக்கையை கொண்ட கலாச்சாரத்தை பின்பற்றும் முஸ்லிம் பேரரசுகள் இருந்தன.
படையெடுப்பு மற்றும் இஸ்லாமிய நாகரீகம்:
உஸ்மானியா பேரரசு தான் உலகிலேயே மிகப்பெரிய பேரரசாக விளங்கியது. ஆப்பிரிகாவின் மேற்கு பகுதியான மொரொக்கோ முதல் பகாரா, சமர்காண்ட் மற்றும் கிழக்கில் அமைந்துள்ள பால்கான் வரை உள்ள பரந்த நிலப்பரப்பை கொண்டதாக உஸ்மானியா பேரரசு இருந்தது. மற்றோரு பக்கம் உஸ்மானியா பேரரசின் செல்வாக்கு மெடிட்டரேனியன் வரை பரவியிருந்தது.
மெடிட்டரேனியன் என்பது ஒரு துர்க்கி ஏரி. முஸ்லிம்கள் அதனை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஐரோப்பியா அநாகரிகத்தில் இருந்த போது, உலகில் இஸ்லாம் மிளிரிக்கொண்டிருந்தது. அந்த நாட்களில் முஸ்லிம்கள் உலகின் முன்மாதிரியாக திகழ்ந்தனர். நிகழ்காலத்தில் நாம் கல்வி கற்க அமெரிக்கா செல்வது போல, அந்த காலத்தில் கிருஸ்துவர்கள் கல்வி கற்க ஸ்பேன்னிற்கு செல்வார்கள். மத்திய கிழக்கு நாடுகள் தான் அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களும் அமைதியாகவும், இணக்கமாகவும் வாழ்வதற்கு ஒரு சிறந்த மாதிரியாகவும், பன்மைத்துவத்துடன் விளங்கியது. ஐரோப்பியர்கள் முஸ்லிகளுடைய சுத்தம், சுகாதாரம், கலாச்சாரம், உணவு, இசை, கலை மற்றும் இலக்கியத்தில் உள்ள ஆர்வம் ஆகியவற்றை வியப்புடன் கண்டு பாராட்டினார்கள். அந்த நாட்களில் தான் ஐரோப்பியாவில் கழிவறைகள் பற்றாக்குறையாக இருந்தது. சொல்லப்போனால் மன்னரும் ஏழையாகத்தான் இருந்தார். அரண்மனையும் நடுங்கிப்போய் இருந்தன. அந்த மன்னருக்கு குளிக்கும் பழக்கமில்லை. அவர் பெயர் ஹென்ரி VIII (1491 முதல் 1547), ஆறு திருமணம் முடித்தவர். இரண்டு மனைவிகளுடைய தலைகள் வெட்டப்பட்டன மேலும் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டார். மன்னர் ஹென்ரி VIII தன்னுடைய வாழ்க்கையிலே 8 முறை தான் குளித்திருக்கிறார். ஒன்று அவருடைய பெயர் சூட்டு விழாவன்று, மற்ற ஆறும் அவருடைய திருமண நாளன்று. மீதமுள்ள ஒன்று அவரால் நடைபெற்றது இல்லை. ஐரோப்பியர்களின் இருண்ட காலம் முஸ்லிம்களின் பிரகாசமான காலமாக இருந்தது. அதன் முடிவிற்கு பல காரணங்கள் இருக்கலாம். இப்னு கால்துன் கூறுகையில், ஒவ்வொரு சமுதாயத்திற்கு எழுச்சியும் உண்டு, வீழ்ச்சியும் உண்டு”.
ஒவ்வொரு நாகரீகமும் ஆரம்பத்தில் அலை போல எழுச்சி பெறும். ஆனால் நபி அவர்களுக்கு பின் 100 ஆண்டுகளில் அற்புதம் நடைபெற்றது. இதுபோன்ற ஒரு காலம் பூமியில் அடிக்கடி நடந்தது இல்லை. முஸ்லிம்கள் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகள் முழுவதையும் வெற்றி கொண்டது. மேலும் அனைத்து நாடுகளும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த வெற்றி அமெரிக்க ஈராக் அல்லது ஆஃப்கானிஸ்தானை வெற்றி கொண்டதை போல் இல்லை. முஸ்லிம்கள் நாடுகளில் வந்திறங்கியவுடன் அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்றனர். முஸ்லிம்களின் சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் நீது உணர்வு அவர்களை வெகுவாக கவர்ந்தது. கலிஃபா உமர் (ரலி) ஜெருசலத்தில் 637 CE வருடத்தில் நுழைந்தார். அங்குள்ள பாரம்பரிய தலைவர்கள் அவரை வரவேற்றனர். உமர் (ரலி) அவர்களுடன் காலாட்படை வீர்ர்களோ, குதிரைப்படை வீரர்களோ வரவில்லை, மாறாக ஒரே ஒரு பாதுகாவரை மட்டுமே அவர் தன்னுடன் அழைத்துவந்தார். அவர்கள் இருவரும் ஒட்டகத்தை மாற்றி மாற்றி சவாரி செய்தனர். அவர்கள் ஜெருசலத்தில் நுழையும் போது ஒட்டகத்தின் மீது உமர் (ரலி) அவர்களில் பாதுகாவலரே சவாரி செய்து வந்தார், இது ஜெருசலத்தில் இருந்த பாரம்பரிய தலைவர்களை திகைப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், உமர் (ரலி) அவர்களின் எளிமை உள்ளங்களைக் கவரும் வண்ணம் இருந்தது. இஸ்லாம் ஒரு நேர்மறையான நம்பிக்கையை கொண்டது. இறைவேதத்தில் சர்ச்சைகள் இல்லை. நம்பிக்கை மிகவும் எளிமையானது ஹஜ்ஜைப் போல. கிருஸ்துவத்தில் மூன்று கடவுள் இருந்தனர். சிலருக்கு இந்த எண்ணிக்கை ஆயிரத்தை அடைந்தது, எந்த கடவுளி வணங்களில் வெற்றி கிடைக்கும் என்பதற்கான எவ்வித சான்றுகளும் இல்லாமல் அவர்கள் அதனை வணங்கினர்.
கிலாஃபத் முதல் மன்னர் ஆட்சிவரை:
நபி அவர்களின் இறுதிப்பேருரையில் ஒரு லட்சம் சஹாபாக்கல் இருந்ததாக வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர் அவர்கள் ஒரே ஒரு ஹஜ் தான் செய்தார். அவர் ஹஜ்ஜத்தில் விதாவில் கூறினார், “அடுத்த ஆண்டு ஹஜ்ஜிக்கு நான் இருக்க மாட்டேன். நான் உங்களிடன் குர்ஆனையும், என்னுடைய வழிமுறையையும் விட்டுச் செல்கிறேன்...”. இதனைக் கேட்டவர்கள் 100 ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளை இஸ்லாமியமயமாக்கினார்கள். அவர்கள் ஒரு சிறப்பான கலாச்சாரத்தை உலகில் உருவாக்கினார்கள். ஆனால் காலப்போக்கில் கிலாஃபத் மன்னர் ஆட்சியாக மாறியாது. மக்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர். அவர்கள் வழிதவறினர், நான்கு கலிஃபாக்கலின் கிலாஃபத்திற்கு பிறகு இருந்த மன்னர் ஆட்சியில் அவர்கள் முதல் முதலில் வரம்புமீறினர். அமாவிஸ் மற்றும் அப்பாஸில் தங்களது கைகளில் ஆயுதங்களை ஏந்தினர். அவர்கள் இருவரும் தங்களது அரசாங்கத்தின் வரயறையை தாங்களே நிர்ணயித்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதரின் வழிமுறைக்கும் நெருக்கமான இருந்தனர், கொலை செய்வதில் அவர்கள் ஒருவரையொருவர் போட்டிப்போட்டுக்கொண்டனர். ஆனால் புத்திசாலித்தனமான நாகரீகம் உயிருடன் இருந்தது. 1258 ஆம் வருடம் மங்கோலியர்கள் பாக்தாத் நகரத்தை அழிளித்தார்கள். அங்குள்ள புத்தகங்களை யூப்ரட்ஸ் – டிக்ரீஸில் எரிந்தனர். புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் புத்தகள் எறியப்பட்ட ஆறுகள் கருப்பு நிறமாக மாறியது, இதன் விளைவாக புத்தகங்களில் இருந்த மைகள் ஆற்றில் கரைந்தது. அந்த காலத்தில் அச்சு தொழிநுட்பம் இன்று போல வளர்ச்சியடையவில்லை, புத்தகங்களை கைகளால் தான் எழுதினர்.
வாழ்வில் வசதிகள் வளர்ச்சியடைந்த போது ஆண்கள் செம்மறி ஆடு போல மாறினர், இஸ்லாமிய மனநிலை மாறிய. மாலிக் பென்னபி ஒரு புகழ்பெற்ற சமூக விஞ்ஞானி. அவருடைய கருத்தின் படி ஆட்சியாளருக்கு, ஆட்சிக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்படும் போது தான் அழிவு ஆரம்பமாகிறது. தொடர்புகள் துண்டித்தன. (இருந்தபோதிலும் தற்போதிருக்கும் சமூக வளைதளங்கள் மூலம், எண்ணங்களை ஒரு சிறிய வார்த்தைகளில் சுறுக்கிவிடுகின்றனர். கணிணியுடனான உறவுகள் நன்றாக உள்ளது, இதனால் நாம் சிரிக்கின்றதுக்கும், அழுகின்றதுக்கும் ஒன்றுமில்லை. அதனால் உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. அதனால் நீதி உணர்வுகள் சமூகத்தில் அழிக்கப்படுகின்றன). ஆட்சியாளர்கள் வெளிப்படையாக வெளியே வருவதில்லை. அவர்கள் தொலைக்காட்சியில் மட்டும்தான் வருகின்றனர். தொலைக்காட்சியில் புகைப்படங்கள் எடுப்பதில் எவ்வித உபயோகமும் இல்லை. (அப்படிய மன்னர் வெளியே வந்தாலும், அவர் பலத்த பாதுகாப்புடன் வருகின்றார். குறிப்பிட்ட சிலரிடம் கைகளை குழுக்குகின்றனர்.
இதன் பின்பு தான் ஐரோப்பிய ஒராய்கள் வருகை தந்தனர். 1492 மற்றும் 1498 ஆம் ஆண்டுகளில். ஃபிரஞ்ச், போர்த்திகீஸ், ஐரோப்பியாவின் ஸ்பேனியர்ஸ் ஆகியோர் பிரிஸ்டீஸார்களுடன் இணைந்து முஸ்லிகளது நிலங்களை கைப்பற்ற வந்தனர். ஸபேனிடர்ஸ் லேடின் அமெரிக்காவை கண்டுபித்தனர். லேடின் அமெரிக்க அதிக மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கண்டம். ஸ்பேனிடர்ஸ் அங்கிருந்த மக்களை அழித்தனர். அதன் பிறகு அங்கிருந்த பழங்குடியின மக்களை கத்தோலிக மதத்திற்கு மாற்றி, சவ்கரியமான வாழ்க்கையை வாழ்ந்தனர். அதன் பிறகு அவர்கள் பிலிப்பென்ஸை அடைந்தனர். பிலிப்பென்ஸ் ஒரு முஸ்லிம் நாடு. மானில தான் அதன் தலைநகரம். ஐரோப்பியாவிற்கு வெளியே, கிருஸ்துவர்கள் சிறுபான்மை முஸ்லிம் பிரதேசமாக மாறியது உலகிலேயே இந்த பிரதேசம் தான் முதல்.
இஸ்லாத்தில் உள்ள நீதி உணர்வு:
“நீதிக்கு முன் அனைவரும் சமம்” என்னும் இஸ்லாமிய கோட்பாட்டை ஐரோப்பியர்கள் பின்பற்றினர். அதிக இடங்களில் குர்ஆன் நீதியை பறைசாற்றியது. இஸ்லாத்தின் சாராம்சம் என்னவென்று கேட்டால், அதற்கான விடை தவ்ஹீத்தாக கிடையாது. தவ்ஹீத் என்பது இஸ்லாமிய கோட்பாடு, நடைமுறையில் நீதி தான் இஸ்லாத்தின் சாராம்சம். இதற்கு மன்னர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். நமது நீதிமன்றங்கள் பிரதம மந்திரியை விசாரணைக்காக நீதிமன்றத்தின் முன் ஆஜராக சொல்ல முடியாது. சி.பி.ஐ. கூட உயர் அதிகாரிகளை கேள்வி கேட்க முடியாது. அதற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி வேண்டும். ஆனால் அன்று முஸ்லிம் மன்னர் மீது அவருடைய ஆட்சி காலத்தில் யாராவது வழக்குப் பதிவு செய்தால், ஷரிஅத் நீதிமன்றம் முன்பு அந்த மன்னர் விசாரணைக்கு வர வேண்டும். இமாம் ஷாஃபியிடம் கவர்னர் தன்னுடைய மகனுக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார் மேலும் அவர் இமாம் ஷாஃபியை அழைத்துக் கொண்டு வந்து விடுவதற்கு ஒரு குதிரை வண்டியையும் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். ஆனால் இமாம் ஷாஃபி கவர்னருக்கு தெரிவித்தார், உங்களது மகனுக்கு பயிற்சி வகுப்புகள் தேவை என்றால் அவனை என்னுடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று. இமாம் அபு ஹனீஃபா மன்னரை விமர்சனம் செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். இப்னு தமையினா சுதந்திரமான கருத்திற்கு எதிராக அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஐரோப்பியாவில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் கிடையாது. பிரபல கிரோக்க ஜனநாயகத்தில் ஒட்டுரிமை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. உண்மையில் ஜனநாயகம் என்பது இஸ்லாத்தில் இருந்து வந்ததாகும். இஸ்லாத்தின் அடிப்படையில் ஒரு சட்டத்தை இயற்றுவதென்றால் அவை விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டும். ஆலோசனை, தன்னாட்சி மற்றும் தனிப்பட்ட நபரின் தற்காப்பு உள்ளிட்டவை ஐரோப்பியாவில் வலுவடைந்தன. ஆனால் இஸ்லாத்தில் சுயாட்சி என்பது உள்ளார்ந்த ஒன்றாக இருந்தது. இஸ்லாமிய நீதித்துறையின் கீழ் நீதித்துறை, நிர்வாகம் மற்றும் சட்டமன்றம் ஆகியவை சுதந்திரமாக செயல்பட்டன. இவை அனைத்தும் ஐரோப்பியாவில் உட்கிரகித்துக்கொண்டிருந்தன.
தொழிற்புரட்சிக்குப் பின் ஐரோப்பியர்கள் நன்கு வளர்ச்சியடைந்திருந்தனர். தங்களால் மட்டும் தான் வளர்ச்சி அடைய முடியும் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களது இன மேலாதிக்கத்தை நிறுவ விரும்பினார்கள். ஐரோப்பியாவில் தான் முதன்முதலில் இனவெறியின் கருத்தியல் தோன்றின. டார்வின் நினைத்தான் இந்த பரிணாம வளர்ச்சி என்னும் மரத்தின் அடியில் அமோபவும், மேலே ஐரோப்பியர்களும் இருக்கின்றார்கள் என்று. துர்கியர்கள் அவர்களை விட மிகவும் கீழ் நிலையில் இருந்தனர். அவர்கள் அறிவியலை ஒரு நடுநிலையான மதிப்பு என்றும், அது வாதத்தை உடையது என்றார்கள். அறிவு என்பது யார் உருவாக்குகிறார்களோ அவர்களைச் சார்ந்தது. அறிவை உருவாக்கும் ஒரு மனிதன் அல்லது இனத்தின் கலாச்சாரத்திற்கு தான் அதில் அதிக செல்வாக்கு இருக்கும். பிரிட்டீஸார் தங்களை, மிகப்பெரிய பேரரசான உஸ்மானியா பேரரசுடன் ஒப்பிடவே மாட்டார்கள். டார்வின் தான் அவர்களுடைய பிரதிநிதியாக இருந்தார். அவர்கள் அறிவியல் துறையில் மிகப்பெரிய முன்னேற்றமடைந்தனர். புதிய ஆயுதங்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளை உருவாக்கினார்கள். 1857 ஆம் வருடம் நடைபெற்ற முதல் சுதந்திரப் போரில் பிரிட்டீஸ் சிப்பாய்கள் கணிசமான எண்ணிக்கையில் கூட இல்லை. ஆனால் அவர்களில் ஒழுக்கம் மற்றும் கட்டளை அமைப்பின் மூலம் இந்திய சிப்பாய்களை அவர்கள் தோற்க்கடித்தனர். தாங்கள் மரபணு ரீதியாக உயர்ந்தவர்கள் என்பதால் இதனை அடைந்தார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் தோன்றியது. 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பஞ்சம் பரவலாக இருந்தது. பசியின் கொடுமையால் மில்லியன் கணக்கானோர் இறந்தனர். கிடங்குகள் முழுவதிலும் நெல் மற்றும் கோதுமைகள் இருந்தபோதிலும் அவற்றை மக்களுக்கு விநியோகம் செய்யமுடியவில்லை ஏனென்றால் அவை ஆங்கிலேயேர்களில் கட்டுப்பாட்டில் இருந்தன. அவர்கள் இந்தியாவை கண்டுபிடித்த போது உலக தொற்சாலைகளின் மொத்த உற்பத்தியில் 22.6 சதவீதம் இந்தியாவில் இருந்தன. ஐரோப்பியாவின் பங்கு 23.3 சதவீதமாக இருந்தன. அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேரிய போது இந்த சதவீதம் 3.8 ஆக குறைந்தது.
சரிவு மற்றும் இழப்புகள் பரவிய போது, அதிகமானோர் இதற்கான தீர்வை பற்றி யோசித்தனர். முஸ்லிம்கள் ஐரோப்பியர்களின் வழிகளை ஏற்றுக்கொள்ளாதத்து தான் இதற்கு காரணம் என்று சிலர் கூறினர். மேற்கத்திய தொழிற்முறையை பின்பற்றினால் மட்டுமே இந்த இழப்பில் இருந்து வெளியே வர முடியும். தொழிற்சாலையை நிறுவுவது, பிரிட்டீஸ் மற்றும் ஐரோப்பிய சட்டங்களை அமுல்படுத்துவது, மேற்கத்தியத்தை பின்பற்றுவது என்று சிலர் கூறினர். துர்கி சுல்தானின் ஆலோசகர் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தினார் “தன்சீமுத்”. தன்சீமுத் என்றால் ஐரோப்பிய சட்டங்களை நேரடியாக இறக்குமதி செய்வது. யாராவது ஒருவர் வட்டியை ஹலாலாக்க வேண்டும். தன்சீமுத் துர்க்கி முழுவதிலும் அமல்படுத்தப்பட்டது.
798 ஆம் வருடம் எகிப்தை நெப்போலியன் அன்னெக்ஸ் ஆட்சி செய்தார். எகிப்தின் தொழில்நுட்பம் துர்க்கியின் ஒரு பகுதியாக விளங்கியது. நெப்போலியன் குதிரையின் மேல் ஏரி வந்தபோது, அவரைப்போல வாழவேண்டும் என்று ஐரோப்பியர்கள் எண்ணினர். பாரிஸ் தெருக்களில் காணப்படும் வாழ்க்கை முறையை மேல்வர்க்க மக்கள் பின்பற்ற ஆரம்பித்தனர். மது அருந்துவது வழக்கமாக மாறியது. முஹம்மது அலி பாசா எகிப்தின் கவர்னரானார். அவர் எகிப்தின் தொழில் முன்னேற்றத்திற்கு முயற்சிகளை எடுத்தார். ஐரோப்பியாவில் இருந்து அனைத்தும் கொண்டுவரப்பட்டன. இரானிலும் இதே நிலைமைதான். இரானிய மன்னர்கள் பிரிட்டீஸ் மற்றும் ஃபிரஞ்ரியர்களுக்கு சாதகமாக சட்டங்களை இயற்றினார். இந்தியாவில் அபின் பயிரிடல் கொடுத்ததைப் போல, இரானில் புகையிலை விற்பனையின் ஏகபோக உரிமைகளை பிரிட்டீஸார்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் இந்த நிகழ்வு தான் இஸ்லாத்தின் வலிமையை காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்த காலகட்டத்தில் தான் ஆப்கானிஸ்தானை சார்ந்த ஜமாலுதீன் ஈரானில் இருந்தார். அவர் ஆயடொல்லாவுடன் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு ஆலோசனை நடத்தினார், மேலும் யாரும் புகையிலையை வாங்க கூடாது என்ற உத்தரவை பிரப்பித்தார். இறுதியில் ஷா இந்த உத்தரவை அளித்தார்.
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில், மேற்கத்திய காலணியாதிக்க சக்திகளின் வருகையால் இஸ்லாம் படிப்படியாக சிதைந்து பல துண்டுகளாக பிரிக்கப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இந்த சிதைக்கும் முயற்சி முழுமைப்பெற்றது. 1914 ஆம் அண்டு முதல் உலக யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. ஐரோப்பியர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த யுத்தம் 1914 முதம் 1919 வரை நிகழ்ந்தது. இந்த யுத்தத்தில் உஸ்மானியா பேரரசு முற்றிலும் சிதைக்கப்பட்டது, இதன் விளைவாக முஸ்லிம் நாடுகள் நாசமாகின. 1924 ஆம் ஆண்டு முஸ்தபா கிமால் பாசாவால் துர்க்கியின் கடைசி சுல்தான் அப்துல் மஜீட்ஜ் II பதவியிழந்து, துர்க்கியை விட்டு வெளியேற்றப்பட்டார், இதன் விளைவாக கிலாஃபத் வீழ்ச்சியடைந்தது. கிமல் பாசா துர்க்கியின் ஆட்சியை கைப்பற்றி, தன்னுடைய பெயரை “கிமால் அதாதுர்க் – துர்க்கியின் தந்தை” என்று மாற்றிக்கொண்டார். துர்க
இப்படிக்கு
பாப்புலர் ஃப்ரண்ட்
லெப்பைக்குடிக்காடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக