காயமடைந்த அனைத்து காசா மக்களுக்கும் எல்லா வகையான சிகிச்சைக்கும் பொறுப்பேற்கிறோம்- துருக்கி பிரதமர் எர்துகான் அறிவிப்பு
சாதாரண காயம் முதல் மிக மோசமான காயம் வரை பாதிப்படைந்த அனைத்து பாலஸ்தீன மக்களுக்கும் எல்லா வகையான சிகிச்சையையும் மேற்கொள்ள தயாராக உள்ளோம் என்று பாலஸ்தீன மக்களுக்களின் சார்பாக உலக அரங்கில் இஸ்ரேலுக்கு எதிராக வாதாடி வரும் துருக்கி பிரதமர் இன்று (சனிக்கிழமை 09.08.14) அறிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது,
காயமடைந்த பாலஸ்தீன சகோதரர்கள் அனைவருக்கும் எங்களால் சிகிச்சை தர இயலும். அதற்காக நாங்கள் கவலைப்படவில்லை. பாலஸ்தீன மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான வசதி இல்லையெனில், அங்காரா, இஸ்தான்பூல் என துருக்கியின் அனைத்து நகரங்களிலும் உள்ள அதிநவீன மருத்துவமனைகளுக்கு அவர்களை கொண்டு வந்து சிகிச்சை தர தயாராக உள்ளோம். இதற்கான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளோம். உயர் சிகிச்சை தேவைப்படும் மக்களை துருக்கி கொண்டு வர பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாசிடமும், இஸ்ரேல் தரப்பிலும் பேசியுள்ளோம். மேலும் அவர் கூறியதாவது, இப்போதைய போரில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் இருநூறு குழந்தைகளையும், கிட்டதட்ட நூறு பெண்களையும் கொலை செய்துள்ளது. மேலும் இரண்டாயிரம் குடும்பங்களின் வாழ்க்கை பாழாக்கப்பட்டு விட்டது. சுமார் 10,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். போரை நிறுத்த துருக்கி கடும் முயற்சி மேற்கொண்டதை குறிப்பிட்ட எர்துகான், எங்களின் நோக்கம் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதே. அதற்கான முறைப்படியான ஆணையை ஐ.நா.விடம் இருந்து விரைவாக எதிர்பார்க்கிறோம். ஐ.நாவின் ஆணை இது விஷயத்தில் எங்களின் பணியை இலகுவாக்கும் என்று கருதுகிறோம் என்றார் எர்துகான். உலகம் முழுவதும் பாலஸ்தீன மக்களுக்காக உதவ துடிக்கும் முஸ்லிம்களின் சார்பாக எல்லா வகையான உதவிகளையும், சிகிச்சைகளையும் அளிக்க முன்வந்து விட்டார் எர்துகான்.
ஏற்கனவே 72 மணி நேர போர் நிறுத்தத்தின் போது துருக்கியில் இருந்து உணவு, தண்ணீர், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எர்துகானின் இந்த அறிவிப்பு பாலஸ்தீன மக்களின் அவலங்களை நினைத்து துடித்துக் கொண்டிருக்கும் நமக்கு மிகுந்த ஆறுதலை தந்துள்ளது. ஏனெனில், இந்திய மக்களாகிய நாம் பாலஸ்தீன மக்களுக்கு எந்த
வகையிலும் உதவ இயலாத நிலையில் உள்ளோம். நமது இந்தியாவில் நடைபெறும் குண்டு வெடிப்புகள் அனைத்துக்கும் இந்துத்துவ சக்திகளே காரணம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கிய நூல் ‘கர்கரேயை கொலை செய்தது யார்?’எனும் நூல். இந்நூல் வெளிவர உதவியர் மஜ்லிசே முஷாவரத் தலைவர் டாக்டர் ஜபருல் இஸ்லாம் கான் அவர்கள் அவர் கூறியதாக வைகறை வெளிச்சம் ஆசிரியர் மு. குலாம் முஹம்மது என்னிடம் சொன்னார்.
நமது இந்திய முஸ்லிம்களில் பலர் காசா மக்களுக்கு உதவ முன்வந்தும் இந்திய அரசு அனுமதி தரவில்லை. பண உதவியை மட்டுமல்ல. மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனுப்பக்கூட அனுமதிக்கவில்லை என்றார். பாலஸ்தீன மக்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளோமே என்று இந்திய முஸ்லிம்களாகிய நாம் ஏங்கி வந்த நிலையில், எர்துகானின் அறிவிப்பு நமது ஏக்கத்தை தணித்துள்ளது. அல்லாஹ் துருக்கி நாட்டுக்கும், எர்துகானுக்கும், கத்தாருக்கும், அந்நாட்டு அமீருக்கும் உதவி செய்வானாக..
ரூஹுல் அமீனைக் கொண்டு அவர்களை பலப்படுத்துவானாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக