Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

20 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது!

20 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது!

சென்னை: தமிழகத்தில் திருச்சி, திருவண்ணாமலை, கோவை, தேனி, திருப்பூர் உட்பட 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக, நீர்வள ஆதார விவர குறிப்பு மையத்தின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் நீர் அளவு, மொத்தமாக ஒவ்வொரு மாதமும் நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்படுகிறது.
கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும், அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து போய் உள்ளது. குறிப்பாக, வணிக நோக்கில் அதிகளவு நீர் எடுக்கப்படுவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. மேலும், ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் அவற்றை தூர்வராமல் இருப்பது போன்ற காரணங்களால் நிலத்தடி நீர் குறைந்துபோனதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த ஜூலை மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2013 ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, திருவாரூர், புதுக் கோட்டை, தஞ்சாவூர், கோவை, திருப்பூர், நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. ஆனால், கிருஷ்ணகிரி, கடலூர், ஈரோடு, கரூர், பெரம்பலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, நாகை., ராமநாதபுரம், நாமக்கல், சேலம், அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களில் கடந்த ஆண்டு 2013 ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.
    லெப்பைக்குடிகாடு சுற்றுப்புற சுகாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு
    WWW.TAUF.NET என்கிற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. லெப்பைக்குடிகாடு முன்னேற்றம் விரும்பும் அனைவரும் இணையத்திற்கு வருகை தந்து உறுப்பினராக வேண்டுகிறோம்.
    WWW.TAUF.NET

    பதிலளிநீக்கு