பெரம்பலூர்: காணாமல் போகும் மலைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இயற்கை அரணாக மலைகள் உள்ளன. இம்மலைகளில் பல்வேறு வகையான பாறைகளும், வன விலங்குகள், மூலிகை செடிகள் மற்றும் அரியவகை மரங்கள் காணப்படுகின்றன. மலைகளில் உள்ள பாறைகள், கட்டிடம், தார்சாலை உள்ளிட்ட பல்வேறு பணிக்காக, வெட்டி எடுத்து விற்பனை செய்ய, தனியாருக்கு ஏலம் மூலம் டெண்டர் விடப்படுகிறது. மாவட்டந்தோறும் உள்ள கனிமவளத்துறை அலுவலகம் கண்காணிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குவாரிகளை, ஆளும்கட்சியின் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் நடத்துகின்றனர். குவாரியில் கல் வெட்டி எடுக்க, வருவாய்த்துறை மூலம் மலையின் நான்கு புறமும் அளந்து, அரசு அனுமதி வழங்கிய எல்லைக்குள் கல் வெட்டி எடுக்க அளவிட்டு உள்ளனர்.
ஆனால், குவாரி உரிமையாளர்கள் அரசு விதிமுறைகளை மீறி, ஒதுக்கீடு செய்த பரப்பளவைவிட அதிகமான பாறைகளை வெட்டி காசு பார்த்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தும், குவாரி உரிமையாளர்களால் தாங்கள் சிறப்பாக கவனிக்கப்படுவதால் கண்டு கொள்வதில்லை.
ஆரம்பத்தில் தொழிலாளர்களை கொண்டு உடைக்கப்பட்ட பாறைகள், தற்போது, ராட்சத இயந்திரங்கள் மூலம், வெடி வைத்து பெயர்த்தெடுக்கின்றனர். இங்கு வைக்கப்படும் வெடியால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும் பலனில்லை. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையும் சமூக ஆர்வலர் விஜய் என்பவரால் தொடர்ந்துள்ளார்.
தவிர, குவாரியில் கல் எடுப்பதற்காக, அதிகப்படியான மரங்கள் வெட்டப்படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்கவும், கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஊர் நம்ம ஊர் -லப்பைகுடிக்காடு .
பதிலளிநீக்குஆனால் இந்த மேப்பில் நம்ம ஊரை காண வில்லை!