தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!
புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும்போது அவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு அறிவிக்கையில் வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இடித்துரைப்பாளர் பாதுகாப்பு மசோதாவை (whistle blowers protection bill) பாராளுமன்றம் நிறைவேற்றிய பிறகு ஊழலை தோலுரித்துக் காட்டிய மூன்று தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று நேசனல் கேம்பைன்
ஃபார் பீப்பிள்ஸ் ரைட் டொ இன்ஃபர்மேஷன் (என்.சி.பி.ஆர்.ஐ) உறுப்பினர் அஞ்சலி பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
இடித்துரைப்பாளர் பாதுகாப்பு மசோதாவிற்கான அறிவிக்கையை உடனே வெளியிடவேண்டும் என்று கோரி மோடி,
அதிகாரிகள் விவகார துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு என்.சி.பி.ஆர்.ஐ கடிதம் எழுதியுள்ளது.
அதிகாரிகள் விவகார துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு என்.சி.பி.ஆர்.ஐ கடிதம் எழுதியுள்ளது.
பொதுப்பணித்துறையின் ஊழலை வெளிச்சம் போட்டுக்காட்டிய உத்தரபிரதேசத்தைச் சார்ந்த மங்கத் தியாகி கடந்த ஏப்ரல் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி 14 ஆயிரம் மனுக்களை தியாகி
சமர்ப்பித்திருந்தார்.
சமர்ப்பித்திருந்தார்.
அரசு நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக தகவல்களை அறிய மனு அளித்ததால் க்ரேட்டர் நொய்டாவில் மோகன் சர்மா என்பவர் கொல்லப்பட்டார்.கொல்கத்தாவில் இந்தியன் அருங்காட்சியகத்தின் கணக்குகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டிய சுனில் உபாத்யாய் என்ற அதிகாரி காணாமல் போயுள்ளார்.மொத்தம் 40 பேருக்கு மிரட்டல் வந்துள்ளதாக என்.சி.பி.ஆர்.ஐ தெரிவித்துள்ளது.
- thoothuonline
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக