இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் முதல் வகுப்பிலிருந்தே மகாபாரத்த்தையும் கீதையையும் பாடப்புத்தகத்தில் சேர்த்திருப்பேன்.ஏனென்றால் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும்
என்பதை அதிலிருந்துதான் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும் என உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே கூறியுள்ளார்.அவருடைய கருத்தில் எந்த குற்றமும் நிச்சயமாக காண முடியாது.ஆனால் குறை காண முடியும்.தனது அறிவுத் தேடலை இன்னும் விசாலமாக்கியிருந்தால் அவர் கண்டறிந்ததை காட்டிலும் அழகான முழுமையான நிரந்தரமான தீர்வான வாழ்க்கை நெறியை அவர் கண்டறிந்திருக்க முடியும்.ஆம் குர்ஆனையும் இஸ்லாமிய சட்டங்களையும் கட்டமைப்பையும் படித்திருந்தால் நிச்சயம் கண்டறிந்திருக்க முடியும்.அது மட்டுமே எனது பார்வையில் ஒரு குறையாக காண முடிகிறது.அது நியாயம் விசாரித்து தீர்ப்புவழங்கும் நீதிபதியிடத்தில் இக்குறையை காண்பது என்பது வருத்தத்தை அளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக