இன்றைய (3/8/14) இந்து தமிழ் நாளிதழில் ஏன் இந்த அமைதி? என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் அருமையான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்கள் அனைவரும் படிக்கவும்.காங்கிரஸை சார்ந்தோர் அப்படித்தான் எழுதுவார் என்பதை காட்டிலும் கடந்த ஆட்சிகளில் இருந்த தவறுகள் இந்த ஆட்சியில் எது இல்லை என்று தான் சார்ந்த கட்சி ஆட்சியில் இருந்த போது இருந்த தவறுகளை சுட்டி காட்டியுள்ளார்.அதே சமயத்தில் மக்களின் இந்த தேர்தல் தீர்ப்பு என்பது அத்தகைய தவறுகளை மோடி சரி செய்வார் என்ற ரீதியில்தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர மதச்சார்பற்ற அரசியலை எதிர்த்து வாக்களிக்கவில்லை.ஆனாலும் ஏன் இந்த அமைதி?
அதைவிட பேராபத்து இன்றைய அரசியல் கட்சிகளின் இந்த அமைதி என்பது நாடாளுமன்றத்திற்குள் எதிர் கட்சிகள் இல்லாமல் இருப்பது ஒரு காரணமாக இருந்தாலும் அவைக்கு வெளியே தேசம் முழுவதும் எதிர் கட்சிகளே இல்லாமல் இருப்பது ஜனநாயகத்தின் பெரும் அவலம் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார்.
உண்மைதான் ஊடகங்கள்தான் தனது வியாபார நோக்கில் பெரும் பொருளாதரத்தை வாங்கி கொண்டு ஒதுங்கி கொண்டார்கள் என்றால் அரசியல் கட்சிகளும் போராட்ட இயக்கங்களும் என்னவானது?
ஏன் இந்த அமைதி????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக