Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 13 ஆகஸ்ட், 2014

விமானியின் சாமர்த்தியத்தால் விமானங்கள் மோதல் தவிர்ப்பு!!

மஸ்கட்டில் இருந்து வங்காளதேச  தலைநகர் டாக்காவுக்கு வங்காளதேச விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 148 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. 
கொல்கத்தா வான் எல்லையில் பறந்த போது அந்த விமானம் 33,000 அடி உயரத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது எதிரே சவுதி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானம் அதே உயரத்தில் பறந்து வந்தது.

இதை பயணிகள்
விமானத்தின் விமானி ரிபுல் இஸ்லாம் பார்த்து விட்டு கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விட்டு தனது விமானத்தின் பறக்கும் உயரத்தை 29 ஆயிரம், அடியாக குறைத்தார்.

அப்போது எதிரே வந்த சரக்கு விமானம் அதே  அடி உயரத்தில் பறந்தது இந்த நிலையில் பயணிகள் விமானம் மீண்டும் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க உத்தரவு வந்தது. அதன்படி மீண்டும் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது. இறுதியில் 1,000 அடி உயர வித்தியாசத்தில் விமானங்கள் கடந்து சென்றது.

விமானங்கள் பறக்கும் உயரம் குறைக்கப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டாலும் விமானியின் சாமர்த்தியத்தால் விமான விபத்து தவிர்க்கபட்டது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக