இந்திய மனிதவள மேம்பாட்டு துறை புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனைகளை வரவேற்றது. அதற்காக ஆர்.எஸ்.எஸ். கொடுத்த ஆலோசனை தான் 12 மணி நேர பள்ளி வகுப்புகள்.
ஆர்.எஸ்.எஸ். இன் வித்யா பாரதி மூலம் கொடுக்கப்பட்ட இந்த ஆலோசனை மூலம் ஆர்.எஸ்.எஸ். தெரிவித்திருப்பது என்னவென்றால் இந்த 12 மணி நேர பள்ளி வகுப்புகளின் மூலம் குழந்தைகளுக்கு மொழிகளையும் கற்றுக்கொடுப்பதோடு வீட்டுப்பாடம் போன்ற அனைத்தையும் பள்ளியிலேயே செய்ய வைத்து பெற்றோர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் பார்த்துகொள்ளலாம் என்று ஆலோசைனை கூறியுள்ளது.
கல்வித்துறையை இந்திய மயமாக்குவது தான் எங்கள் குறிக்கோள் என்று வித்யா பாரதி தெரிவித்துள்ளது. குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தில் மொழிகளை கற்றுகொள்வது எளிது. அதனால் அவர்களுக்கு சமஸ்க்ருதம், ஹிந்தி, ஆங்கிலம், மற்றும் பிராந்திய மொழிகளையும் கற்றுகொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இத்தகைய பயிற்சிகளை தற்போதுள்ள பள்ளி வகுப்பு நேரங்களில் கற்றுகொடுப்பது முடியாத காரியம். அதனால் வகுப்பு நேரங்களை 12 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது. காலை 7:30 மணியில் இருந்து மாலை 7:30 வரை வகுப்புகளை வைத்தால் வேலைக்கும் செல்லும் பெற்றோர்களுக்கு குழந்தைகளின் கல்வி குறித்த கவலையை போக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் மாணவர்களையும் மாணவிகளையும் ஒரு சேர 12 மணி நேரம் வைத்திருக்க முடியாது என்றும் கோ-எஜுகேசன் முறையால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது, அதனால் அதனை அனுமதிக்க கூடாது என்றும் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக