Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

உயர்நீதிமன்ற நீதிபதிகளில் முஸ்லிம் நீதிபதிகளின் சதவிகிதம் வெறும் 4%


உயர்நீதிமன்ற நீதிபதிகளில் முஸ்லிம் நீதிபதிகளின் சதவிகிதம் வெறும் 4%

14.2 சதவிகிதம் கொண்ட இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நீதித்துறை வெறும் நான்கு சதவிகிதம் மட்டுமே உள்ளது கவனிக்கதக்கது. மொத்தம் உள்ள 26 உயர்நீதிமன்றங்களில் உள்ள 601 நீதிபதிகளில் வெறும் 24 முஸ்லிம் நீதிபதிகளே உள்ளனர். இது வெறும் 4% ஆகும்.
அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 74 நீதிபதிகளில் 15 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.
ஆனால் அங்கு வெறும் 4 நீதிபதிகளே முஸ்லிம்கள். அந்த 4 நீதிபதிகளிலும் நீதிபதி அக்தர் ஹுசைன் கான் ஜனவரி 9 ஆம் தேதி ஓய்வு பெற்றுவிட்டார். மற்றும் ஒருவர் இந்த வருடத்தில் ஓய்வு பெறுவார், இன்னொருவர் அடுத்த வருடத்தில் ஓய்வு பெறுவார்.
ஹைதராபத் உயர்நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 27 நீதிபதிகளில் 3 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். மும்பை உயர்நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 59 நீதிபதிகளில் 7 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் தற்பொழுது இரண்டு நீதிபதிகள் மட்டுமே முஸ்லிம்கள். அதில் ஒருவர் இந்த வருடம் ஓய்வு பெறுகிறார்.
கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 42 நீதிபதிகளில் 11 முஸ்லிம் நீதிபதிகள் இருக்க வேண்டும். தற்பொழுது அங்கே 2 நீதிபதிகளே முஸ்லிம்கள். அதிலும் ஒருவர் இந்த வருடமும் மற்றொருவர் அடுத்த வருடமும் ஓய்வு பெறுகின்றனர். டில்லி உயர்நீதிமன்றத்தில் 39 நீதிபதிகளில் 5 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் அங்கு 2 பேர் தான் நீதிபதிகளாக உள்ளனர்.
அஸ்ஸாம், சென்னை,மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஹரியானாவில் தலா 16, 37, 30 மற்றும் 50 நீதிபதிகளில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. ஜம்மு கஷ்மீரில் 10 நீதிபதிகளில் மூன்று பேர் முஸ்லிம்கள். அதில் ஒருவர் அடுத்த வருடம் ஓய்வு பெறுகின்றார். கேரளாவில் 35 நீதிபதிகளில் 5 பேர் முஸ்லிம்கள். அதில் இரண்டு பேர் இந்த வருடம் ஓய்வு பெறுகின்றனர்.
பாட்னாவில் 28 நீதிபதிகளில் 2 பேர் முஸ்லிம்கள் அதில் ஒருவர் இந்த வருடம் ஓய்வு பெறுகின்றார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் உள்ள 25 நீதிபதிகளில் ஒருவர்தான் முஸ்லிம். அவரும் இந்த வருடம் ஓய்வு பெறுகின்றார். உத்திரகாண்டில் 6 நீதிபதிகளில் ஒருவரும் முஸ்லிம் இல்லை.
இந்திய ஜனத்தொகையில் இஸ்லாமிய சமுதாயத்தின் விகிதாசாரத்தை கணக்கிடும் பொழுது 86 நீதிபதிகள் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக