தொடர்ந்து தஞ்சைக்கு வாடகைக்கு கார் ஒட்டிய மஜீத் ஒருநாள் காலையில் காரை சுத்தம் செய்யும்போது காரில் தங்க வளையல் சீட்டிற்கு அடியில் கிடந்தது.
வாடகைக்கு காரில் வந்தவர் யாரோ தான் விட்டு சென்றுவிட்டார்கள் என்று புரிந்துகொண்டார்.
இரண்டு நாள் கழித்து தன் மகன் சலீமை சைக்கிளில் உட்காரவைத்து ஒரு வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டின் வாசலில் அமர்ந்து வீட்டில் உள்ள மிஸ்கின் என்பவரை அழைத்தார். மிஸ்கின் வெளியே கேட்கும் அழைப்பை கேட்டவுடன் வெளியே வந்து மஜீதிடம் என்ன இந்தப்பக்கம்! என்று பேச தொடங்கினார். இருவரும் சாதாரணமாக பேசிக்கொண்டனர்.நீண்ட பேச்சிற்கு பிறகு மஜீத் மிஸ்கின் வீட்டை விட்டு வெளியேறினார்.
அடுத்து பக்கத்து தெருவில் உள்ள காதர் வீட்டிற்கு சென்று இதேபோல் நடந்துக்கொண்டார் மஜீது.இதேபோல் மூன்று வீட்டுக்கு சென்று பேசி திரும்பினார் இதை பார்க்கும் சலிமுக்கு ஒன்றும் புரியவில்லை.
இறுதியாக ஜலீல் என்பவர் வீட்டுக்கு சென்றார். வீட்டில் கணவன் மனைவி சண்டை நடைபெற்று கொண்டிருந்தது, மஜீத் அந்த வீட்டுக்காரர் ஜலீலை “ஜலீல் அண்ணன் கொஞ்சம் வெளியே வாங்க“ என்று அழைத்தார் மஜீதின் அழைப்பை கேட்டவுடன் ஜலீல் திண்ணையில் வந்து அமர்ந்து” என்ன மஜீத் இந்த நேரத்துல இங்க வந்துருகிங்க என்று கேட்டார். அதற்கு மஜீத்” பக்கத்து தெருவுக்கு வந்தேன் அதான் அப்படியே உங்களையும் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றார்.
வீட்டில் என்ன சண்டை என்று மஜீது ஜலீலிடம் கேட்டார்.அதற்கு ஜலீல் “நான் துபாய்ல இருந்து வங்கி வந்த தங்க வளையலை பொண்டாட்டி காணாடிச்சிடா பா! அதனால தான் சண்ட” என்று கூறினார்.
இதனை கேட்டவுடன் மஜீது தன் சட்டை பக்கெட்டில் இருந்து அந்த தங்க வளையலை எடுத்து உங்கள மனைவி என் கார்ல சவாரி வந்தப்ப இத தவரவிட்டாங்க போல அத கொடுக்கத்தான் வந்தேன்” என்று கொடுத்தார்.
அப்போதும் தான் மகன் சலீமுக்கு தெரிந்தது தனது தந்தை கடைசியாக காரில் சவாரி செய்த எல்லோருடைய வீட்டிற்கு சென்று அங்கு அவர்களிடம் சோதித்து சரியான வீட்டில் அமானிதத்தை ஒப்படைக்க இப்படி செய்தார் என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக