தே.மு.தி.க.கட்சியின் தலைவரும் தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த தனது திரையுலகில் சொல்லத்தக்க சாதனைகளை படைத்துள்ளார். திரைத்துறையில் உள்ளவர்கள் அரசியலில் ஈட்டுபடுவது தமிழக அரசியல் கலாசாரத்தின் ஒரு எழுதபடாத விதி.இதற்கு விஜயகாந்தும் மற்றுமொரு உதாரணம். திரைத்துறைக்கு பின் அரசியல் வாழ்கையை 2005-ல் தொடங்கிய விஜயகாந்த தொடக்கம் முதல்
ஏறுமுகமாக இருந்தார்.ஒரு சீட்டில் தொடங்கி இன்று எதிர்கட்சி தலைவராக வரை பயணித்து வருகிறார். அரசியல் பின்புலம் இல்லாமலும்,எந்த ஒரு அரசியல் கட்சியின் தொடர் ஆதரவு இல்லாமலும்,அறிவார்ந்த அரசியல் அனுபவம் கொண்ட நபர்கள் கட்சியில் இல்லாதபோதும், சுய சிந்தனை இல்லாதபோது மற்றும் மதுஅருந்துபவர் என்ற தோற்றத்தின் பாதிப்பையும் முன்னே வைத்துகொண்டு இதனை ஆண்டுகளாக கட்சியையும் தனது அரசியல் நிலைபாட்டை(வெற்றி மற்றும் அதிகாரம்) நிலையாக நடத்தி வருவது மிகவும் ஆச்சர்யமான விசயம். இதை பார்க்கும்போது விஜயகாந்தை யாரோ பின்னே இருந்து இயக்குவதுபோல் தெரிகிறது.இதில் மனைவியின் ஆலோசனை பெரும்பங்கு உள்ளது என்றும் சொல்லமுடியாது,திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அரசியல் பின்புலம் கொண்டவர்களும் கிடையாது.இவரை முதலில் அரசியலுக்கு அறிமுகம் செய்தவரும் விஜயகாந்த் தான். இதைப்பார்க்கும்போது என் மனதில் மோடியை பாராளுமன்ற தேர்தலில் இயக்கிய சக்திகள் போன்று விஜய்காந்தையும் ஒரு மறைமுக சக்திகள் இயக்குகிறதோ என்று சந்தேகம் தோன்றுகிறது. கூட்டணி அரசியல்,சரியான நேரத்தில் செய்யும் உதவிகள்,வழக்கமான செயலை அரசியலாக்குவது மற்றும் பொது வெளியில் அனுதாபம் பெறுவது இது எல்லாம் நடிகனால் மட்டும் செய்ய இயலாது. விஜயகாந்துக்கு பின்னால் யார்? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் அதை உங்களிடம் விட்டுவிடுகிறேன் பதிலை நீங்கள் தாருங்கள். விஜயகாந்துக்கு பின்னால் யார்?
–ஆரூர்.யூசுப்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக