பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இன்று 18-01-2016 திமுக கண்டன ஆர்பாட்டம் நடத்தியது.
நமதூர் மேற்கு ஜமாத் ஆதரவோடு வெற்றி பெற்ற பேரூராட்சி தலைவர் என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக வார்டு கவுன்சிலர்களுக்கும் பேரூராட்சி தலைவருக்கும் கருத்து வேருபாடு இருந்து வருகின்றன ( ஆனால் பேரூராட்சி துணை தலைவர் ஆவதற்கு இவர்கள் ஆதரவு கொடுத்தது வேறு விசயம்).
இந்த ஆர்ப்பாட்டத்தில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் சிவசங்கர் MLA அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. மாவட்ட கழக செயலாளர் குன்னம் இராசேந்திரன் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் மதியழகன் திருமால் , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரசூல் அஹமது , சிறுபான்மையணி துணை அமைப்பாளர் ஜாஹிர் உசேன் , மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் திருமாந்துறை கருப்பையா , SSSR ,முபாரக் அலி , தம்பி ராஜா மற்றும் ஊர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை தொரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக