அபூ ஜஹீல்:
1. ஃபிர்அவ்னை போன்றவன்.
2. மக்களை ஆட்சி செய்து அதிகாரம் செலுத்துபவன்.
3. தன் அதிகாரம் ஆட்சி இழப்பதற்கு அவன் தயாரில்லை.
4. இஸ்லாம் மேலோங்கினால் அதிகாரம் இழந்துவிடுவோம் என்று இறுதிவரை இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டான்.
6. குர் ஆனை பொய்ப்பித்து அதற்கெதிராக சதி செய்தான்.
7. குரைஷி மக்களை ஒன்றுதிறட்டி நபிகளாரையும் (ஸல்) முஸ்லிம்களையும் கொல்லுவதற்கு பத்ர் நோக்கி படிதிரட்டினான்.
8. சிலைகளை பகறங்கமாக வணங்கியும், பாதுகாத்தும் வந்தான்.
9. இஸ்லாத்தை அழிப்பதற்கு தன் பொருளாதாரத்தை செலவிட்டான்.
10. சுமையா (ரலி), யாசிர் (ரலி) போன்றோர்கலை கொன்று கொடுமைகள் இழைத்தான்.
இவனோடும், இவனை போன்ற குரைஷிகளோடும் தற்போது கப்ர் ஜியாரத், பித்ஆ செய்யும் முஸ்லிம்களை ஒப்பிடுவது சரியான ஒப்பீடா?
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நின்று கப்ர் ஜியாரத்தையும், பித் ஆக்களையும் முஸ்லிம்கள் மத்தியில் தெளிவுபடுத்துவதும், மாநாடு நடத்துவதும் வரவேற்கத்தக்கது. அதே போன்று சகோதரத்துவத்தை பேணி கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ளும் நாகரித்தையும் குர்ஆன் ஹதீஸ் சொல்லவில்லையா? அதனை ஏன் போதிக்க மறுக்கின்றீர்கள்? பின்பற்ற மறுக்கின்றீர்கள்?
தமக்கு விரும்பாத கருத்துடையவர்களை எதிர்கொள்வதில் பெருமானார் (ஸல்) கற்றுத்தந்த நாகரிகம் வெளிப்பட வேண்டும்.
இஸ்லாத்தை அழிப்பதற்காக முனைந்து வந்து, சிறைக்கைதியாக பிடிப்பட்டு. அண்ணாலாரை பார்த்து, அவர்களுடைய நாகரிகத்தை பார்த்து இஸ்லாத்தை ஏற்ற எத்தனையோ உதாரணத்திற்கு சொந்தக்காரர்கள் நாம்.
நம்முடைய வாட்சப், முகநூல் கருத்து பரிமாற்றங்களை பார்த்தால் இஸ்லாமிய நாகரிகம் எங்காவது தென்படுக்கின்றதா?
என் கருத்தை வலுசேர்க்க குர்ஆன் ஹதீஸ், என் நடத்தை நான் விரும்புவது போல்தான் இருக்கும் என்றால். சிலதை பின்பற்றி சிலதை புறக்கணித்த யூதர்கள் மேல் உள்ள சாபம் நமக்கு பொருந்தாதா சகோதரா?
நமக்குள் சிலரை அபூஜஹீலாகவும், உத்பாவாகவும் மாற்றுவது சரியான போக்கா? அதற்குத்தான் இந்தபூமியில் சிறந்த சமூகமாக நாம் இருக்கின்றோமா?
எல்லா வகையிலும் நீதி மறுக்கப்பட்டு கண்ணியம் இழந்து இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இஸ்லாமிய அடையாளங்கள் கேலி செய்யப்படுகின்றது.
சத்தியத்திற்கு சான்று பகரும் வாழ்க்கை வாழாமல், முஷ்ரிக்கீன்களுக்கு அடிமையாக வாழ பழகி கொடுக்கப்படுகின்றோம்.
முஸ்லிம்களில் இருசாரார் அடித்து கொண்டு அதில் ஒரு சாரார் வெற்றி பெறலாம். மேலோங்கலாம்.
முஸ்லிம்களே அடித்து கொள்கின்றார்கள். மார்க்கத்தில் பிரச்சினை என்கின்றார்கள் என்ரு பிறர் பார்க்கும்போது இஸ்லாம் தோற்கின்றது என்பதை மறக்க வேண்டாம்.
நாம் வீழ்ந்து இஸ்லாம் வெற்றி பெற்றதாக இருக்கட்டும் சகோதரா!. நானும் என் ஜமாத்தோ இயக்கமோ வென்று இஸ்லாம் தோற்றதாக ஒருபோதும் இருக்க வேண்டாம்.
Wassalam,
Gulam.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக