Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

சாதி பாகுபாட்டினால் பாதிக்கப்பட்ட ஐ.ஏ. எஸ் அதிகாரி இஸ்லாத்தை ஏற்றார் ...


சாதி பாகுபாட்டினால் பாதிக்கப்பட்ட ஐ.ஏ. எஸ் அதிகாரி இஸ்லாத்தை ஏற்றார்

தலித் வகுப்பை சேர்ந்தவர் உம்ராவ் சலோதியா. 1978 ஆம் ஆண்டு இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். அவர் சீனியாரிட்டியின் படி வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவர் தலைமை செயலாளர் ஆவதை விடும்பாத வசுந்தரா ராஜே அரசு ஏற்கெனவே உள்ள தலைமைச் செயலாளர் சி.எஸ். ராஜன் என்பவரின் பதவிக்காலத்தை 2016 மார்ச் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் மனம் உடைந்த உம்ராவ் சலோதியா, இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “நாடு விடுதலையடைந்த பிறகு SC/ST பிரிவைச் சேர்ந்த நான் முதல் முறையாக மாநிலத்தின் தலைமைச் செயலாளராக வியாழக்கிழமையான இன்று சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் நடப்பு தலைமைச் செயலாளர் சி.எஸ்.ராஜனின் பதவிக்காலம் 2016 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனக்கான வாய்ப்பை மறுப்பதாகும்.
ஆகவே மூன்று மாதகால நோட்டீஸ் அடிப்படையில் நான் அனைத்திந்திய பணி அலுவல் விதிமுறைகளின் படி பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறேன். எனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும், ஏனெனில் ஜூனியர் அதிகாரியின் கீழ் நான் பணியாற்ற விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் ஜாதி பாகுப்பட்டால் தனக்கு ஏற்பட்ட இந்த நிலையினால் தான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்க உள்ளதாகவும் உம்ராவ் சலோதியா அறிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, “இஸ்லாம் மதத்தில் மனிதர்களிடையே பாகுபாடு கிடையாது, இந்து மதம் சாதி அடிப்படையில் பாகுபாடு உடையது. மதம் மாறிய பிறகு எனது பெயர் உம்ராவ் கான்” என்றார்.
இது குறித்து ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர ராத்தோர், கூறும்போது, “சலோதியா அரசுக்கு எதிராக பேசியதன் மூலம் சட்டத்தை மீறியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” என்றும் “இது குறித்து ராஜஸ்தான் அரசு விசாரணை செய்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் சலோதியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக