Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு எதிராக மோடி அரசு!


அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு எதிராக மோடி அரசு!

உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் இயங்கி வரும் புகழ் பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம்இந்தியாவில் பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைகளுக்கு இரையாகியுள்ளது.பிரபல சமூக ஆர்வலரும்,சீர்திருத்தவாதியுமான சர் செய்யது அஹ்மத் கான்(1817-1898) அவர்களால் முஸ்லிம்களின் கல்விமுன்னேற்றத்தை இலட்சியமாக கொண்டு 1875-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முஹம்மதன்
ஆங்கிலோ -ஒரியண்டல் காலேஜ், பின்னர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாக விரிவடைந்தது.இந்தியமுஸ்லிம்களின் அறிவுசார் துறை வளர்ச்சியில் மிகப்பெரிய நன்கொடைகளை வழங்கிய கல்விநிறுவனம்.கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு அலிகர் பல்கலைகழகம் போன்ற கல்வி நிறுவனங்களின் பங்கினை நாம் புரிந்துகொள்ள முடியும்.அலிகரை தவிரடெல்லியில் முஸ்லிம்களின் முயற்சியில் துவக்கப்பட்ட ஜாமிஆ மில்லியா இஸ்லாமியபல்கலைக்கழகம்(1920) இன்னொரு முக்கியமான கல்வி நிறுவனமாகும்.அதன் பிறகு பெயர் கூறும்அளவுக்கு இந்தியாவில் இன்னொரு கல்வி நிறுவனம் முஸ்லிம்களுக்கு இல்லை எனலாம்.இவைஇரண்டு நிறுவனங்களும் சுதந்திரத்திற்கு முன்பாக துவக்கப்பட்டதாகும்.அதாவது, சுதந்திர இந்தியாவில்கல்வி துறையில் தங்களை அடையாளப்படுத்தும் ஒரு  நிறுவனத்தை முஸ்லிம்களால் உருவாக்கஇயலவில்லை என்று பொருள்.இத்தகையதொரு சூழலில் அலிகர் பல்கலை கழகத்தின் முக்கியத்துவம்பெரியதாகும்.
ஆனால், அலிகர் முஸ்லிம் பல்கலை கழகத்தை சீர்குலைப்பதற்கும், ஒழித்துக் கட்டவும் பல முயற்சிகள்இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.சங்க்பரிவார் சக்திகள் தாம் அதில்முன்னணியில் உள்ளனர்.அலிகர் பல்கலையின் சிறுபான்மை அந்தஸ்தை இழக்கச் செய்வதற்கானமுயற்சிகள் அதிகாரப்பூர்வ மட்டங்களில் நடந்து வருகிறது.இன்னொன்று, அலிகர் பல்கலையைதீவிரவாதத்தின் மையமாக சித்தரித்து அதன் புகழை கெடுக்கும் முயற்சி.சங்க்பரிவாரின் தீவிரமானபரப்புரையில் பலரும் சிக்கியுள்ளனர்.
அலிகர் பல்கலையின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.1981-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஏ.எம்.யு(அலிகர் முஸ்லிம் பல்கலை கழகம்)திருத்த சட்டம் பிரிவு 2(1) இல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:’இந்தியாவில் சிறுபான்மையினரால்அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட நிறுவனம்’.அதேவேளையில், இந்நிறுவனத்தின்மாணவர் சேர்க்கை மற்றும் நியமனங்களில் முஸ்லிம் சமூகத்திற்கான சிறப்பு அதிகாரம் தொடர்பாகசட்ட, தொழில் நுட்ப சர்ச்சைகள் நீடிக்கிறது.இதில் தெளிவை ஏற்படுத்தவும், சந்தேகத்திற்குஇடமில்லாத வகையில் சிறுபான்மை அந்தஸ்தை புதுப்பிக்கவும் இதுவரையிலான அரசுகள்தயாராகவில்லை என்பதுதான் உண்மை.
2016 ஜனவரி மாதம் 11-ஆம் தேதி மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகிஉச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஒரு பிரமாண பத்திரம் தான் மீண்டும் அலிகர் பல்கலை கழகம்செய்தியில் இடம்பெற காரணமானது.1981-ஆம் ஆண்டு நியமனத்தை அடிப்படையாக கொண்டு, 2004-ஆம்ஆண்டு மருத்துவ இளங்கலை(பி.ஜி) சேர்க்கைக்கு 50 சதவீத இடங்களை முஸ்லிம் சமுதாயத்திற்காகபல்கலைக் கழகம் ஒதுக்கியிருந்தது.இத்தீர்மானத்தை அலகபாத் உயர்நீதிமன்றம் ரத்துச்செய்தது.அன்றைய மத்திய அரசும், பல்கலை கழக நிர்வாகமும் உச்சநீதிமன்றத்தைஅணுகினர்.இந்நிலையில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த இவ்வழக்கில் வாதத்தை கேட்கும்அமர்வு முன்பாக முகுல் ரோத்தகி புதிய பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.முந்தைய ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்திற்கு முரணாக மோடி அரசு புதியபிரமாணப்பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.அலிகர் பல்கலை கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து தேவைஇல்லை என்றும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து முந்தைய அரசு தாக்கல் செய்தமேல்முறையீட்டை வாபஸ் பெறுவதாகவும் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.ஆனால்,இவ்வழக்கை தொடர்ந்து நடத்துவதில் அலிகர் முஸ்லிம் பல்கலை கழக அதிகாரிகள் உறுதியாகஉள்ளனர்.
முஸ்லிம்கள் பிற்போக்கு நிலைக்கும், அவர்கள் முன்னேறாததற்கும் காரணம் கல்வி அறிவின்மையேஎன்று பா.ஜ.க உள்ளிட்ட சிலர் அடிக்கடி சுட்டிக்காட்டுவதுண்டு.ஆனால், முஸ்லிம்கள் கல்வியில்முன்னேறுவதற்காக நிறுவப்பட்ட அபூர்வமான சில நிறுவனங்களை கூட ஒழித்துக்கட்டும்நிலைப்பாட்டைத்தான் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எடுத்துள்ளதை நாம் தெளிவாகபுரிந்துகொள்ள முடியும்.அலிகர் முஸ்லிம் பல்கலை கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்துதேவையில்லை என்ற பிரமாணப்பத்திரம் மத்திய அரசின் சகிப்புத்தன்மையற்ற நிலையையும்,முஸ்லிம்கள் மீதான குரோதத்தையும் பறை சாற்றுகிறது.தலித்துகளை விட பிற்படுத்தப்பட்ட நிலையில்உள்ளதாக முஸ்லிம்களின் நிலை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கைகூறுகிறது.அத்தகைய சமூகம், முன்னேற்றத்தின் பாதையில் பயணிக்க எடுக்கும் எந்தவொருமுயற்சியையும் அனுமதிக்கமாட்டோம் என்ற தீர்மானத்தையே பா.ஜ.க அரசின் பிரமாணப்பத்திரம்சுட்டிக்காட்டுகிறது.14 சதவீத மக்கள் தொகையை கொண்ட ஒரு சமூகம் பிற்படுத்தப்பட்டவர்களாகவாழ்ந்தால், அது நாட்டின் வளப்படுத்தலை பாதிக்கும் என்ற பொதுவான அறிவு சங்க்பரிவார்களுக்குஇல்லை என்று கூறிவிட இயலாது.எனினும், அலிகர் பல்கலை விவகாரத்தில் அவர்களுடையமறுதலிக்கும் போக்குக்கு காரணம் மதவாத சிந்தனை பீடித்த குறுகிய மனப்பாண்மையே.அலிகர்முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து பாதுகாக்கப்படவேண்டும்.அதற்கான சட்டத்தைமத்தியில் ஆளும் அரசு இயற்றவேண்டும்.இதற்காக அனைத்து தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்குஅழுத்தம் கொடுக்கப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக