Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 14 ஜனவரி, 2016

வேண்டாம் இன்னொரு ஹிரோஷிமா, நாகசாகி!!

வேண்டாம் இன்னொரு ஹிரோஷிமா, நாகசாகி!! – அப்சர் சையத்
அணுகுண்டை விட அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடி குண்டை வெற்றிகரமாக சோதித்து பார்த்துவிட்டோம்” என்று வடகொரிய அரசு அதிகாரப்பூர் வமாக அறிவித்துள்ளது. இந்த அதி பயங்கரமான ஹைட்ரஜன் வெடிகுண்டை வடகொரியா கடந்த 5ம் தேதி சோதித்து பார்த்துள்ளது. இது குறித்து அந்நாட்டு தொலைக் காட்சியில் வெளியான செய்தியில், “வடகொரியா ஹைட்ரஜன் வெடி குண்டை வெற்றிகரமாக நடத்தி விட்டது. இதன் மூலம்
அணுசக்தியில் வடகொரியா அடுத்தக்கட்டத்துக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் மட்டுமே இதை பயன்படுத்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டது இதனால் சர்வதேச நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. வடகொரிய அரசு சர்வதேச விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் அதன் செயல்பாடுகள் நீடிக்கின்றன. மேலும், அமெரிக்கா மீதும் போர் தொடுப்போம் என்று பகிரங்கமாகவே அறிவித்தது. ஏற்கெனவே அணு ஆயுதங்களை 3 முறை பரிசோதித்துவிட்டது. இதனால் ஐ.நா. மற்றும் பல நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளன.
அணுகுண்டை விட சக்தி வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு. இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டை விட ஹைட்ரஜன் வெடிகுண்டு சக்திவாய்ந்தது, இந்த அணுகுண்டு வகையறாக்கள் சுமார் 2 லட்சம் உயிர்களைப் பலிவாங்கிய ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டை விட சக்திவாய்ந்தது என்பது அதிர்ச்சியான செய்தி.
இந்த ஹைட்ரஜன் அணுகுண்டை தயாரிப்பது மிகவும் கடினம் என்றும் அமெரிக்கா தெரி வித்துள்ளது. வடகொரியாவின் சோதனை, சர்வதேச நாடுகளை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது, இவர்கள் வெடி குண்டு சோதனை நடத்தியதற்கு இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் அனைத்து முக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சொல்லும் இதே அமெரிக்க தான் அன்றைக்கு ஹிரோஷிமா நாகசாகி மீது போர் விமானங்கள் மூலம் அணுகுண்டு தாக்குதலை நடத்தியது என்பதை நாம் மறந்து விட முடியாது.
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றிபெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் பேர்ள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. அதன்பின்னரே போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. முடிவில், அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக் கொண்டது. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசியெறியப்பட்டன.
இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே இன்றுவரை போர்ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்றும். இந்த அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர் என்றும். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று தன்னை தானே நியாப்படுத்தி கொண்டது அமெரிக்க. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது.
முதல் அணுகுண்டு விச்சுகளின் செயல்பாடுகள் இவ்வாறு இருக்க, இப்போது வட கொரியா ஹைட்ரஜன் வெடி குண்டை வெற்றிகரமாக சோதித்து பார்த்துவிட்டோம் என்று சொல்லியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயம், இனியும் ஹிரோஷிமா நாகசாகி போன்ற அனுவிச்சுகள் இவ்வுலகிற்கு வேண்டாமே அதுமட்டுமின்றி இதில் உயிரிழக்க போவது ஒன்றும் அறியா பொது மக்கள் தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். இனியொருயுத்தம் வேண்டாமென்பதை உலகுக்கு உணர்த்தும், ஹிரோஷிமா நாகசாகி சம்பவம் மனித குலத்தின் மிருக தனமான செயற்பாட்டுக்கு ஆதாரமாகும், மனித இனத்திற்கு மனிதனே எதிரியாக வேண்டாமே . சக மனிதர்களை கொல்ல மனிதர்கள் என்ன வெல்லாம் செய்கிறார்கள். சிங்கம் மற்ற சிங்கங்களைக் கொள்வதில்லை மான் வேறு மானைக் கொள்வதில்லை , அதேபோல் மற்ற எந்த உயிரினமும் செய்யத்தகாத செயலை மனிதர்கள் மட்டும் ஏன் செய்கிறார்கள், இது போன்ற மிருகத்தனமான செயலை இனி ஒரு போதும் செய்ய வேண்டாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக