Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

விவசாயிகள் தற்கொலை, குறையும் எண்ணிக்கை சதியா? உண்மையா?

விவசாயிகள் தற்கொலை, குறையும் எண்ணிக்கை சதியா? உண்மையா? – அனிஷா யூனுஸ்
தேசிய புலனாய்வு குழுவின் அறிக்கையின்படி இந்திய அளவில் 2012இல் 13,754ஆக இருந்த எண்ணிக்கை, 2013இல் 11,744ஆக குறைந்துள்ளது. வரவேற்கத்தக்க மாற்றம் என நாம் கொண்டாட வேண்டிய நல்ல செய்திதான். ஆனால் உண்மையில் நல்ல செய்தியா?..ஆய்வுக்குட்படுத்துங்கள் என்கிறார், சூழலியளாளர், திரு.பி.சாய்நாத்.
புதுச்சேரி மாநிலம் 2011,2012 மற்றும் 2013இல் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்கிறது அரசு ஆவணம். எனில்
2009இல் நடந்த 154 தற்கொலைகளின் மூல காரணத்தை ஆராய்ந்து ஆறு மாதங்களில் விடை தந்து விட்டதா அரசு!.. விவசாயிகளின் சுவர்க்க பூமி ஆகிவிட்டதா புதுச்சேரி???
புதுச்சேரியில் மட்டுமல்ல, சட்டீஸ்கர் மாநிலமும் அதே வழியைத்தான் பின்பற்றுகின்றது. 2001இலிருந்து 2010 வரை கிட்டத்தட்ட 14,000க்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். 2010லிருந்து 2013 வரை ஒரு விவசாயியும் அந்த வழியில் செல்லவில்லை என்கிறது அரசாங்கம். எப்படி உருவானது இந்த திடீர் ஞானோதயம்?? ஞானோதயம் ஏற்பட்டது, விவசாயிகளுக்கா அல்லது மாநில அரசுக்கா??
11872119_935263859888896_527470325851623484_o
வருடத்தில் 951 விவசாயிகளின் உயிருக்கு உலை வைத்த மேற்கு வங்கம் ஆகட்டும், 558 பேரின் உயிர் குடித்த ஆந்திரா, மத்திய பிரதேசம் (82), கர்நாடகா (472)வாகட்டும், தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை சடாரென பூஜ்ஜியத்திற்கு வந்ததன் பின்னணி என்ன???
வருடக்கணக்கில் ஆயிரங்களைத் தொட்டுக்கொண்டிருந்த மாநிலங்கள் திடீரென இப்போது அப்படி எதுவும் தங்கள் மாநிலங்களில் நடப்பதே இல்லை என தகவல் தெரிவிக்க ஆரம்பித்துள்ளன. மஹாராஷ்டிராவைத் தவிர்த்து. தேசிய அளவில் மஹாராஷ்டிரம்தான் பத்து வருடங்களாக இதில் முன்னணியில் உள்ளது. 2004இலிருந்து 2013வரை வருடத்தில் சராசரியாக 3,685 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது 10 விவசாயிகள். பின் மற்ற மாநில விவசாயிகளுக்கு மட்டும் கிடைத்த வியத்தகு வரம்தான் என்ன???
சென்னை, ஆசிய ஊடகக் கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர் கே.நாகராஜ், அரசு தரப்பு தகவல்களில் கையாடல் நடைபெறுகிறது என்கிறார். 2008இலிருந்து இந்தியா முழுதும் நடைபெறும் விவசாயிகளின் தற்கொலைகளின் மேலான ஆய்வைச் செய்யும் இவர், அரசுகள் தகவல்களை திட்டமிட்டு மறைத்து வருகின்றன. மஹாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் என ஐந்து பெரும் மாநிலங்களே இதைச் செய்யும்போது மீதமுள்ள மாநிலங்களும் அதன் வழி செல்ல ஆரம்பித்துள்ளன என்கிறார். எனினும், எண்களின் மேல் என்னதான் திருத்தல் வேலைகளைச் செய்தாலும், முழுதுமே அவற்றை அழிக்க முடியாது. ஒரு காரணத்தினால், ஒரு துறையில் ஏற்படும் இழப்பை எத்தனை காலம்தான் இன்னொரு துறையில் ஏற்பட்டதாக காரணம் காட்ட முடியும் என்கிறார். எனினும் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. #அச்சேதின் #நல்லநாட்கள்
11140367_935263853222230_6162871595480584232_n
பேராசிரியர் நாகராஜ் கூறுவது போல, விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட ஆரம்பித்திருக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் தற்போது சுயமாக தொழில் புரிவோரின் தற்கொலை விகித எண்ணிக்கை வீங்கிக்கொண்டு வருகிறது. சட்டீஸ்கர் மாநிலம் விவசாயிகளின் எண்ணிக்கையில் கை வைக்காமல் இருந்த வரைக்கும் (2008 மற்றும் 2009) விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 826ஆகவும், விவசாயியல்லாத மற்றவர்களின் எண்ணிக்கை 851ஆகவும் இருந்தது. 2009இலிருந்து தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகவும் ‘இன்ன பிறரின்’ எண்ணிக்கை 1826 மற்றும் 2077ஆகவும் உயர்ந்துள்ளது. மஹாராஷ்டிரத்திலும் விவசாயிகளின் எண்ணிக்கை 640ஆகக் குறையும் அதே வேளையில் ஆயிரத்திற்கும் அதிகமான ‘இன்ன பிற’ மனிதர்களின் தற்கொலை நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசமும் விதிவிலக்கல்ல. விவசாயிகள் – 82, இன்ன பிறர் 236 என்கிறது. புதுச்சேரியிலும் இதே விகிதாச்சாரக்கூத்து களை கட்டி உள்ளது. இந்த ’வேற்று மனிதர்களின்’ தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து அறிவிக்குமா அரசுகள்???
இந்தப் பிரச்சினையே வேண்டாமென, மேற்கு வங்க மாநிலம், 2012-ல் எந்தத் தகவலையுமே அரசு தரப்பிலிருந்து பதியவில்லை. என்றால் என்ன அர்த்தம். ஒரு கூரையின் கீழ் ஒன்றுமே நடப்பதில்லை எனில், இன்னொரு கூரையின் கீழ் பிரளயம் குடி கொண்டுள்ளது என்பதுதானே??? இன்னொரு பக்கத்தில் தேசிய அளவில் விவசாயிகள் என அடையாளம் தாங்கும் எண்ணிக்கையும் மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.
மாநில அளவிலேயே தகவல்கள் அட்ஜஸ்ட் செய்யப்படுகின்றன எனும்போது மத்திய அரசிடமிருந்து என்ன எதிர்பார்ப்பது?? இன்னொரு சென்சஸ் தகவலின் படி 2011-ல் மட்டும் 7.7மில்லியன் விவசாயிகள் தத்தம் வேலையை விட்டுள்ளனர். இத்தனையையும் தாண்டி 2011இலிருந்து இன்ன பிறரின் தற்கொலைகளை விட 47 சதவிகிதம் விவசாயிகளின் சாவு என்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது. உதாரணத்திற்கு சட்டீஸ்கர் மாநிலத்தின் தற்கொலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விட 350 விழுக்காடு அதிகமாக உள்ளது. அதே போல் மஹராஷ்டிரத்தில் 160 விழுக்காடு உயர்வாக இருக்கின்றது, தேசிய அளவில் விவசாயிகளைத் தவிர்த்து…!!
1995இலிருந்து ஆரம்பித்த விவசாயிகளின் தற்கொலைகள், மஹராஷ்டிரத்தில் மட்டுமே 60,000 எண்ணிக்கையைத் தாண்டி விட்டது. இந்த நேரத்தில், நாட்டின் முதுகெலும்பாம் விவசாயிகளின் பிரச்சினைகளை அறிந்து, ஆராய்ந்து, அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டிய அரசுகளே இவ்வாறு அழித்தல் திருத்தல் வேலைகளின் ஈடுபடும்போது எதனை நம்பி இன்னும் மீதமிருக்கும் விவசாயக் குடும்பங்கள் தங்கள் வாழ்நாளை நீட்டிக்கும் என்பது புதிரே!!
முழு விவரங்களுடன் ஆங்கிலத்தில் படிக்க -
http://bit.ly/1PzkTZD
http://bit.ly/1ZtpJga
http://bbc.in/1Kக்ஂஇக்4
- அனிஷா யூனுஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக