38 வயதான மஹதியா ஹம்மத் என்ற பெண் நான்கு குழந்தைகளுக்கு தாய் ஆவார். தன் குழந்தைக்கு உணவு கொடுப்பதற்காக காரில் விரைந்து சென்ற இவரை தங்கள் மீது கார் ஏற்றி கொள்ள வந்தார் என்கிற சாக்கு கூறி இஸ்ரேலிய ராணுவம் சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளது. 17 முறை சுடப்பட்ட அவர் இரத்த வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். இவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
சமீபகாலமாக பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொல்வது அதிகரித்துள்ளது. ஹம்மத் இன் கொலைக்கு சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு பாலஸ்தீனியர் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். ராணுவத்தினரை கத்தியால் குத்த வந்தார் என்று அவரது கொலைக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது. அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து இதுவரை இஸ்ரேலிய படையால் சுட்டுக்கொள்ளபட்டபாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 138. இதில் 26 சிறுவர்களும் அடக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக