Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 6 ஜனவரி, 2016

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.



இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு.
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்குரிய படிவம் பெற்று வரும் 28.02.2016-க்குள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றோர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 31.12.2015 அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 31.12.2015 தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை ஒரு புகைப்படம் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசீயமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன் 29.02.2016-க்குள் விண்ணப்பம் பெற்று அங்கேயே பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்து உதவித்தொகை பெற்று பயன்பெறலாம், என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக