நமதூர் சுன்னத்துவல் ஜமாத் மதரசாக்களுக்கு முன்மாதிரியாக தாருஸ்ஸலாம் சிறார் மதர்சா
சொந்த பந்த உறவுகளை தாண்டி ஒரு குழந்தைக்கான சமூக உறவை
ஏற்படுத்தி தருவது பள்ளி( மதர்ஸா) க்கூடங்கள்தான். இங்கிருந்துதான் அவன்(ள்) சமூகத்தை பார்க்க , பழக ஆரம்பிக்கிறான்(ள்).
அறிவுத் தளத்திலிருந்து யோசிக்கவும் புரிதல்களை உள்வாங்கவும் நல்ல களமாக பள்ளி(மதர்ஸா)க்கூடம் விளங்குகிறது. இது சமூக அக்கறை கொண்ட ஆசிரியரை கொண்டு மட்டுமே சாத்தியப்படும். ஆசிரியர் என்பவர் தன் மாணவருக்கு கற்பிக்கும் திறனால் அம்மாணவனை சமூகத்தின் அந்தஸ்துடைய மதிப்புமிக்கவனாகவும், சிறந்த சமுதாய பற்றாளராகவும் மாற்றி அன்பால், ஒழுக்கத்தால் , பண்புமிக்க தூரநோக்கு சிந்தனை உடைய மாணவனாக மாற்றுகிறார்.
மாஷா அல்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
பதிலளிநீக்கு