எண்ணெய் வளங்கள் செழிக்கும் நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளில் தங்கள் இயக்கத்தை விரிவுபடுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல இந்திய நிறுவன உரிமையாளர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். இன் தலைவர் மோகன் பகவதிற்கும் பல ரகசிய சந்திப்புகள் ஏற்படுத்தப்பட்டது என்று கோஸ்டல் டைஜஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கேரளா மாநில அழுவா பகுதியில்
உள்ள தந்த்ரா வித்யா பீடத்தில் டாக்டர் பி.ஆர்.ஷெட்டி, உட்பட பல வெளிநாட்டுவாழ் இந்திய முதலாளிகளை மோகன் பகவத் இது தொடர்பாக சந்தித்து பேசியுள்ளார் என்று தெரிய வருகிறது. மேலும் இவர்களிடம் ஆர்.எஸ்.எஸ் இற்கு பொருளாதார அடிப்படையிலும் உதவி செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு நிதி உதவி வருவது புதிதல்ல. மேலும் ஆர்.எஸ்.எஸ். இன் அபிமானிகள் அதிகம் வசிக்கும் அமீரகத்திற்கு சமீபத்தில் மோடி சென்று வந்தது இந்த சந்தேகங்களை வலுக்கச்செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக