இந்திய வரலாற்றை பொறுத்தவரை இசுலாமிய மன்னர்கள் என்றாலே வில்லன்களாகவும்,கொள்ளையர்களாகவும்,அரக்கர்கள் மற்றும் மதவெறி பிடித்தவர்களாவும் தான் எழுதப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இஸ்லாமிய மன்னர்களுக்கு இந்த போலி முகங்களை கொடுத்தவர்களின் கதையையே மக்கள் நம்பியுள்ளனர். இவ்வரலாற்று போலியை சரிசெய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.
இந்திய வரலாற்றில் இசுலாமிய மன்னர்கள் குறித்து கட்டமைக்கப்பட்ட போலி கதைகளை வைத்து தற்போதைய இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்த இசுலாமியர்களை குறிவைத்து வன்முறையை கட்டவிழுத்துவிடும் போக்கு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்திய சமூகத்தின் மீதும் அதன் கலாச்சரத்தின் மீதும் இசுலாமிய ஆட்சியாளர்கள் பல அநீதிகளை இழைத்தார்கள் என்ற மனநிலை 21ஆம் நூற்றாண்டினிலும் தொடர்ந்து நிலவிவருகிறது. சில அறிவு ஜீவிகள் இந்நிகழ்வை உண்மை வரலாற்றோடு ஒப்பிடு செய்து இது முற்றிலும் திரிக்கப்பட்ட வரலாறு என்று புரிந்துகொண்டனர். இப்படி தவறாக புரிந்துகொண்ட இசுலாமிய மன்னர்களில் அவ்ரங்கசீப்பும் ஒருவர்.
ஆறாம் முகலாய பேரரசரான அவ்ரங்கசீப் மீது பல சர்சைக்குரிய குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. உதாரணமாக அவ்ரங்கசீப் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்து கோவில்களை இடித்துள்ளர், பல நூறு இந்துக்களை கொன்று குவித்துள்ளார், நாடெங்கும் தனக்கு கீழ் உள்ள மாகாணத்தின் இந்துக்களை கத்திமுனையில் மாதம் மாற்ற முயற்சித்தார் என்பதுதான் பிரதான குற்றசாட்டுகள்.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அவ்ரங்கசீப் இந்துக்களின் எதிரி என்ற கருத்து பலரின் மனதிலும் ஆழமாக பதியவைக்கப்பட்டுள்ளது. அவ்ரங்கசீப் மீது உள்ள அவதூறுகளை வைத்து இன்றைய சில கல்வியாளர்களும் சில அரசியல்வாதிகளும் ஆதாயம் தேடுகின்றனர்
அவ்ரங்கசீப் அவர்கள் தனது 49 ஆண்டு கால ஆட்சியில் சில இந்து மத கோவில்களை இடித்துள்ளார் என்பது உண்மை என்றாலும் அதற்கு பின்னால் உள்ள காரணிகளை யாரும் பார்ப்பதில்லை. வெறுமனே அவ்ரங்கசீப் இந்து கோவில்களை இடித்துள்ளார் அதனால் அவர் இந்துக்களின் விரோதி என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகள் முன்பு சென்றோம் என்றால் இசுலாமியர்கள் இந்திய துணைக்கண்டத்தில் கால்பதிப்பதற்கு முன்பே இந்து மன்னர்கள் இந்தியாவிலும் பிற நாட்டிலும் உள்ள இந்துமத கோவில்களையும் பிறமத கோவில்களையும் இடித்துள்ளனர். இதனை பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றில் பதியாமல் ஒரு வரலாற்று வஞ்சனையை செய்துவந்துள்ளனர். இது “மாபெரும் வரலாற்று பிழை”
அவ்ரங்கசீப் அவர்கள் தனது ஆட்சிகாலத்தில் 12க்கும் குறைவான கோவில்களை இடிக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கான பிரதான காரணிகள் எதிர்காலதில் மத கலவரங்கள் தலையெடுக்க கூடாது என்பதற்காகவும், அமைதியான சூழ்நிலையை பாதுகாக்கும் எண்ணம் தான். மேலும் இதில் பெரும்பாலான கோவில்கள் பயன்படுத்தாமல் கவனிப்பார் அற்ற கோவில்கள்.
கோவில்களை இடிக்கும் செயலில் இந்திய மன்னர்களின் பங்கு அதிகம் உதாரணமாக தமிழகத்தில் உள்ள இராஜராஜ சோழன் தனது ஆட்சிகாலத்தில் தமிழக்கத்தில் பிறபகுதியிலும் கேரளம் மற்றும் கர்நாடகம் பகுதியில் உள்ள குறுநில மன்னர்களிண்டம் போர் செய்து பல பகுதிகளை தனக்கு கீழ் கொண்டுவந்தார். அப்போர்களில் கோவில்களில் உள்ள கஜானாவை கைப்பற்ற அங்குள்ள கோவில்களை இடித்துள்ளார். அதேபோல் மராட்டிய மன்னர்களும் போரின்போதும் படையெடுப்பின்போதும் வழிபாட்டுத்தலங்களை சேதமடைய செய்துள்ளனர். ஆனால் வரலாற்றில் இதனை மறைத்து இசுலாமியர்கள் இடித்தை மட்டும் குறிப்பிடுவது உன்மை வரலாற்று செய்யும் துரோகம்.
அவ்ரங்கசீப் அவர்கள் தனது ஆட்சிகாலத்தில் எந்தவொரு நேரத்திலும் இந்துக்களை துன்புறுத்தியதில்லை. பல இந்து கோவில்களுக்கு தனது கஜானாவில் இருந்து பொருளாதரத்தை அளித்து கோவில்களை பராமரிக்க ஆணையிட்டு பாதுகாத்தும் வந்துள்ளார். இஸ்லாம் அல்லாத பிறமதங்களை மதித்து அதற்கான மரியாதையை கொடுத்து அந்த சமூதாய மக்களையும் தனது பேரரசின் கீழ் பதவியில் அமர்த்தி அழகுபார்த்தார். அவ்ரங்கசீப் ஆட்சிக்காலத்தின் போதும் இந்து மத ஆட்சியாளர்கள் இசுலாமியர்களின் மசூதிகளை இடித்துள்ளார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துனைகண்டத்தில் இந்து ஆட்சியாளர்கள் இடித்த இந்து மத கோவில்களும் மடங்களும் எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் இடித்ததாக கூறப்படுவதை விட அதிகம்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் பார்க்கும்ப்போது அவ்ரங்கசீப் நவீன காலத்தின் அனைத்து மததிற்கான சமஉரிமையை வழக்கும் போக்கிற்கு முன் உதாரணமாக விளங்குகிறார்.
கடந்தகால நிகழ்வுகளை வைத்து அவ்ரங்கசீப் போன்ற மன்னர்களையும் இதர இந்திய மன்னர்களையும் குற்றம்சாட்டுவதினால் இன்றைய இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை குறிப்பாக இசுலாமியர்களை நேருக்கு நேராக நின்று தவறாக மதிப்பீடு செய்யும் நிலை ஏற்படுகிறது.
இதே அளவுகோலை கொண்டு நாம் ஏன் இந்து மத ஆட்சியாளர்களை மதிப்பிட்டு பேசுவதில்லை? அவர் எந்த ஒரு அநீதிகளையும் செய்தது இல்லையா? உலகளவில் உள்ள அனைத்து ஆட்சியாளர்களையும் கணக்கிட்டு பார்த்தால் இந்து மத ஆட்சியாளர்களின் தரம் மிகவும் மோசமானது.
மத நம்பிக்கையின் அடிப்படையினால் ஏற்படும் பிரச்சனைகள் அன்றைய காலகட்டத்தில் இல்லை. ஆனால் அது இன்றைய இந்தியாவில் முக்கிய பிரச்சனையாக மாறிவருகிறது. பாரபட்சம் மற்றும் மரண எல்லைகளுக்கு கூட தள்ளும் தொந்தரவுகளுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இசுலாமியர்களை இலக்குகளாக்கபட்டிருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் இந்திய இசுலாமியர்களின் அன்றாட வாழ்வில் மரணபயம் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது.
வரலாற்று அறிவுஜீவிகள் இடைக்கால ஆட்சியாளர்களை குறிப்பாக அவ்ரங்கசீப் போன்ற ஆட்சியாளர்களை தென் ஆப்ரிக்க நிறவெறி தலைவர்களோடு ஒப்பீடு செய்தால் நமக்கு ஓர் ஆச்சர்யமான தகவல் கிடைக்கும் தென் ஆப்ரிக்க நிறவெறி தலைவர்கள் இனவாதத்திற்கு எரிவூட்டும் செயலில் தான் அதிகம் ஈடுபட்டுள்ளார்கள்.ஆனால் இசுலாமிய ஆட்சியாளர்கள் இதில் மாறுபட்டு இருந்தனர்.
இந்தியாவின் இடைக்கால இசுலாமியர்களை வில்லனாக காட்டும் கட்டுகதைகளை அகற்ற அதிக களம் தேவைப்படும். ஆனால் அவை எப்பாடுபட்டும் அகற்றப்படவேண்டும். இப்படியான நச்சுக் கருத்துகள் இந்திய துணை கண்டத்தில் இசுலாமியர்களை மத அடிப்படையிலான பிரச்சனைகளை சந்திக்க வைக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் சொல்லபடும் இசுலாமிய தீவிரவாததிற்கும் இக்கட்டுகதை அடித்தளமாக இருக்கிறது.
கடந்த கால வரலாற்றில் செய்யபட்ட வஞ்சனையினால் நாம் உண்மையான வரலாற்றை எங்கும் படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் இதனை ஆய்வுக்கு உட்படுத்தி கடந்தகால வரலாற்று நிகழ்வுகளையும் அது நடைபெற்றபோது நாட்டில் நிலவிய சூழ்நிலையையும் கவனித்து தான் அந்நிகழ்வை பற்றி வரலாற்றில் பதிவு செய்யவேண்டும். கடந்தகால வரலாற்று நிகழ்வை நிகழ்கால சூழ்நிலையோடு ஒப்பிடக்கூடாது
இந்திய வரலாற்றில் இசுலாமிய மன்னர்களையும், பேரரசர்களையும் மட்டும் தனிமைப்படுத்தி அவர்களை ஓர் துரோகிகள்போல் எழுதியுள்ள போக்கை பற்றி இந்தியாவில் ஓர் நீண்ட விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.இப்போக்கினால் இந்திய வரலாற்றில் இசுலாமியர்கள் பற்றிய பக்கங்கள் திருத்தப்படும்.
மேலும் இந்தியாவின் கடந்தகால வரலாறு சிக்கலான மற்றும் அசுத்தமான தடத்தில் எழுதப்பட்டுள்ளது. நாம் அதில் மத பதற்றத்தை பிரதிபலிக்கும் பொய்களையும் அதன் நுணுக்கங்களையும் தகர்த்தெறிந்து உண்மையான வரலாற்றை நீதியின் மூலம் எழுதவேண்டும்.
இவ்வரலாற்று பிழையை சரிசெய்யவேண்டிய நேரம் இதுதான் கடந்தகால வரலாற்றில் உள்ள கற்பனைகதைகளை உடைத்து உன்மை வரலாற்றை பொதுவெளிகளில் சொல்வதின் மூலம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் வரலாறு நாளைய தலைமுறைகளுக்கு படிப்பினையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக