அரசாங்கத்தின் சீருடை அணியும் பணியில் இருக்கும் முஸ்லிம்கள் தாடி வைப்பது குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளியாக அஸ்ஸாம் ரைபிள் பிரிவில் பணியாற்றிய வீரரான ஹைதர் அலி என்பவரை மீண்டும் பணியமர்த்தவும் அவருக்கு கொடுக்கப்படவேண்டிய நிலுவைதொகைகளை கொடுக்குமாரும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டு பணியில் இருக்கும்போது தன் தாடியை சவரம் செய்ய மறுத்தார் என்ற காரணத்தால் ஹைதர் அலி பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஹைதர் அலி அரசியலமைப்பின் வழிபாட்டுக்கான உரிமையின் அடிப்படையில் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் “பணியில் இருப்பவர் தாடி வைக்க கூடாது என்பதற்கான எந்த சட்டமும் இல்லை. நம் நாடு சட்டதிட்டங்களின் அடிப்படையில் ஆட்சி செய்யப்படுகின்றது மாறாக தனிப்பட்ட அதிகாரிகளின் விருப்ப வெறுப்பின் அடிப்படையில் இல்லை, அது அவர் எவ்வளவு பெரிய உயர்பதவிகளை வகித்தாலும் சரியே” என்று கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக