பாலஸ்தீன் இன்பர்மேசன் சென்டர் என்ற பாலஸ்தீன செய்தி தளம் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த இஸ்ரேலிய எதிர்ப்பு கார்டூன் ஒன்றை நீக்கியதோடு அந்த தளத்தின் ஃபேஸ்புக் கணக்கை தற்காலிகமாக நீக்கியுள்ளது ஃபேஸ்புக்.
2009 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டு ஓவியர் கார்லோஸ் லாடுஃப் வரைந்த அந்த ஓவியம் இஸ்ரேலின் அக்கிரமங்களை உலகிற்கு எடுத்துகூறுவதை தடை செய்வது குறித்தது.
2008 ஆம் ஆண்டு பாலஸ்தீனின் காஸா பகுதியின் மீதி இஸ்ரேல் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 300 குழந்தைகள் உட்பட 1300 பேர் மடிந்தனர். இந்த படுகொலையை தொடர்ந்து இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. எப்போதும் போல இஸ்ரேல் தன் அராஜகபோக்கிற்கு எதிரான விமர்சனங்களை யூத எதிர்ப்பு விமர்சனங்கள் என்று கூறி கூக்குரலிட்டு அழும். காரோல்ஸின் ஓவியமும் இஸ்ரேலிய எதிர்ப்பு கருத்துக்களை யூத எதிர்ப்பு என்று அடக்குவதை குறிப்பிட்டிருந்தது.
உயிரிழந்த தன் மகனை கையில் ஏந்தியபடி ஓடி வரும் ஒரு தாயின் வாயை இஸ்ரேலிய கொடி அடைத்திருப்பது போன்ற ஓவியம் அது. இந்த ஓவியத்தை ஃபேஸ்புக் தடை செய்திருப்பது எதற்காக அந்த ஓவியம் வரையப்பட்டதோ அதையே நிறுவுகிறது. அதாவது இஸ்ரேல் தனகெதிரான அனைத்து குரல்களையும் அடைக்கிறது என்று கார்லோஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த PIC இன் ஃபேஸ்புக் பக்க அட்மின் ராமி சலாம் கூறுகையில் ” கார்டூன்கள் தான் பெரும்பாலும் ஃபேஸ்புக்கினால் குறிவைக்கப்படுகின்றது. ஏனென்றால் அது அனைத்து தரப்பினரிடையேயும் சென்று சேருகின்றது. கார்லோஸின் கார்டூன்கள் தான் எங்கள் பக்கத்தில் பரவலாக பகிரப்படுபவை, அதனால் தான் அவரது கார்டூனை ஃபேஸ்புக் நீக்கியது என்று நினைகின்றேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், “அந்த கார்டூன் திடீர் என்று காணாமல் போய்விட்டது. எங்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் தரப்படவில்லை. நாங்கள் எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் லாகின் செய்ய முற்படும் போது ஒரு தகவல் வந்தது. அதில் அந்த கார்டூன் ஃபேஸ்புக்கின் கொள்கைகளை மீறுவதாக இருந்ததினால் நீக்கப்பட்டுவிட்டது என்றும் அந்த கார்டூனை பகிர்ந்த எங்கள் பக்கம் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தது. மேலும் ஃபேஸ்புக் எங்கள் பக்கத்தை முற்றிலுமாக அழித்துவிடுவதாகவும் மிரட்டியது” என்று அவர் கூறியுள்ளார்.
இதே போல இதற்கு முன்னதாக ஒரு முறை தங்கள் பக்கம் ஒரு நாள் முடக்கப்பட்டதையும் சலாம் நினைவு கூறியுள்ளார். அது ஒரு யூதர் தனது குழந்தையுடன் துப்பாக்கி ஏந்தி நிற்கும் படத்தை பகிர்ந்ததர்க்காக ஏன்று கூறியுள்ளார். இதே போல சில வீடியோக்கள் மற்றும் படங்களும் தங்கள் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால் ஃபேஸ்புக்கின் இஸ்ரேலிய ஆதரவு கயிறு கருத்து சுதந்திரத்தின் கழுத்தில் இறுக்கப்பட்டு நாம் ஃபேஸ்புக்கில் எதையும் பதிவு செய்ய முடியாமல் போய்விடும் என்று தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஃபேஸ்புக்கில் இத்தகைய நிலை என்றால் கூகிளையும் யுடியுபையும் இதே நிலையை கடைபிடிக்குமாறு இஸ்ரேலிய வெளியுறவுதுறை துணை அமைச்சர் சமீபத்தில் கேட்டுக்கொண்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். செய்தியை படிக்க கிளிக் செய்யவும்.
ஃபேஸ்புக்கின் அராஜக போக்கு மற்றும் திட்டங்கள் குறித்த புதிய விடியல் பதிவுகள்
நன்றி புதிய விடியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக