Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 28 அக்டோபர், 2014

நமதூரில் கணினி பயிற்சி அளிப்பதாக கூறி மாணவ, மாணவிகளிடம் ரூ.2.5 லட்சம் வசூல் மோசடிகம்ப்யூட்டர் சென்டர் நிர்வாகிக்கு வலை


பெரம்பலூர், : பெரம்பலூர் அருகே லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கணினி அடிப் படை பயிற்சி அளிப்பதாக கூறி ரூ.2.5 லட்சம்  வசூலித்து மோசடி கம்ப்யூட்டர் சென்டர் நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். 


பெரம்பலூர் மாவட் டம், குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சியிலுள்ள ஆண் கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கணினி பற்றிய அடிப்படை பயிற்சி அளிப்பதாக பெரம்பலூர் மற்றும் அரியலூரில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வரும் வடிவேல் என்பவர் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தலா ரூ.550ம், 9 மற்றும் 10 வகுப்பு வரை தலா ரூ.650ம், 11 மற்றும் 12ம் வகுப்பு வரை ரூ.750ம் என 300க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வசூல் செய்துவிட்டு பயிற்சி பெற வரும் அனைவரையும் இன்று போய் நாளை வாருங்கள் என பயிற்சி அளித்திடாமல் கடந்த ஒரு மாதமாக மாணவ, மாணவியர்களை அழைக்கழித்துள்ளார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று சம்மந்தப்பட்ட கம்யூட்டர் சென்டருக்கு வழக்கம் போல் வந்துள்ளனர். கம்யூட்டர் சென்டர் பூட்டப்பட்டிருந்ததோடு, போன் செய் தால் வடிவேல் அதனை எடுப்பதும் இல்லை. 
இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவி கள் தங்களுக்கு பயிற்சி அளித்திடவோ அல்லது பயிற்சி கட்டணமாக செலுத் திய பணத்தை திரும்ப பெற்றுத்தரவோ வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டவாறு சம்மந்தப்பட்ட கம்யூட்டர் சென்டர் முன் பகுதியில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர். 

இதுபற்றி சமூக ஆர்வலரான சாகுல் மூலம் தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை சமாதானம் செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் கணினி பயிற்சி அளிப்பதாக தெரிவித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடம் லட்ச கணக்கில் மோசடி செய்துவிட்டு தலைமறைவான வடிவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி செய்தி தினகரன்
புகைப்படம் நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக