வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள இணையதள வசதியை உபயோகப்படுத்த வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில், வாக்காளர் பட்டியலை திருத்தும் முறை அக், 15 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 1.1.15 அன்று வரை 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள், வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துகொள்ளலாம்.
இதற்கு ஆன்லைன் எனப்படும் இணையதள சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பெயர் சேர்ப்பு மட்டுமல்ல, பெயர் நீக்கம், திருத்தம் ஆகியவற்றையும் செய்யலாம்.
www.elections.tn.gov.in/ eregistration என்ற இணையதளத்தில் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆன் லைன் பதிவு வசதிக்காக, இணையதள மையங்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளோம் இவற்றில் ஏதாவது ஒரு மையத்துக்குச் சென்று அந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், சென்னை தாலுகா அலுவலகங்களில் உள்ள அரசு பொது இ–சேவை மையங்களில் இந்த வசதிகள் உள்ளன. குறிப்பிட்ட சில தொகையை செலுத்தி இந்த ஆன்லைன் வசதியை விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். அவரவர் தங்கள் சொந்த கனிணி அல்லது லாப் டாப்பையும் இதற்காக பயன்படுத்த முடியும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக