Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 8 அக்டோபர், 2014

மங்கள்யான் கார்ட்டூன்: நியூயார்க் டைம்ஸ் மன்னிப்புக் கோரியது!

செவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரம் வாசகர்களிடமிருந்து வந்த புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, அப்பத்திரிகை மன்னிப்பு கோரியிருக்கிறது.

'பணக்கார நாடுகளின் விண்வெளிக் குழு' என்று குறியிடப்பட்ட அறை ஒன்றின் வாசல் கதவருகே ஒரு விவசாயி பசுமாட்டுடன் வந்து கதவைத் தட்டுவதுப் போல இந்தியாவை மோசமாக சித்தரிக்கும் ஒரு கேலிச் சித்திரத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், பேஸ்புக் பதிவொன்றின் மூலம் எழுதிய நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசெந்தால், இந்தக் கார்ட்டூன் விண்வெளி ஆராய்ச்சி என்பது எப்படி பணக்கார மேலை நாடுகளின் பிரத்தியேக வெளியாக இனி இல்லை என்பதைக் காட்டவே வரையப்பட்டது என்று கூறி, இந்தக் கார்ட்டூனால் புண்பட்டிருக்கும் வாசகர்களிடம் மன்னிப்பைக் கோரினார்.
இந்தியாவின் இந்த மங்கள்யான் திட்டம் 74 மிலியன் டாலர்கள் செலவில் நிறைவேற்றப்பட்டது. இதுவரை அனுப்பப்பட்ட வேற்றுக் கிரக விண்வெளி திட்டங்களில் இதுவே மிகவும் குறைந்த செலவு பிடித்த திட்டமாகும். கடந்த மாதம் இந்த மங்கள்யான் செயற்கைக் கோள் செவ்வாயின் சுற்றுப் பாதையில் நுழைந்தது.
நன்றி நியூஇந்தியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக