பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதியதில் கண்டக்டர் உள்பட 2 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து சென்னைக்கு நேற்றுமுன்தினம் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.
திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு என்ற இடத்தில் அதிகாலை 3 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அவ்வழியில், பஸ்சுக்கு முன்னால் நூல் பண்டல்களை ஏற்றிய லாரி ஒன்று போய் கொண்டிருந்தது. அப்போது, லாரியை ஓவர்டேக் செய்ய பஸ் டிரைவர் முயன்றபோது, இடதுபக்கமாக வந்த லாரி திடீரென்று சாலையின் நடுவே வந்தது. இதில், எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதிய பஸ் சுமார் 30 மீட்டர் தூரம் இடித்தபடி சென்றது. பஸ்சின் முன்பகுதி நொறுங்கி லாரிக்குள் புகுந்தது.இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியில் அமர்ந்திருந்த கண்டக்டர் சுதாகர்(46), பயணி கோவிந்தராஜ் (36) ஆகிய 2 பேர் பலியானார்கள். 25 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த மங்களமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக