எங்கள் சமுதாயதிற்கு படித்த முட்டாள் தேவையில்லை, படிப்பறிவுள்ள சிந்தனையாளர் தான்.
இன்றைய பள்ளி கூடங்களின் நிலையை தான் குறிப்பிடுகின்றோம். ஆம் நாம் சென்று படித்த கல்வி வேறு இன்று நமது குழந்தைகள் கற்கும் கல்வி வேறு.
நாம் படிக்கும் பொழுது ஆற்றங்கரையில், குளத்தில், வாய்க்கால் நீரோடையில் குளித்து, மீன் குஞ்சுக்களை பிடித்து விளையாண்ட காலமும், தெருவில் கபடி, ஆபியம், இச்பைடு, குண்டு, பம்பரம், கிட்டி பில், கிரிகெட், அடிபந்து, கொக்கி , கண்ணாமுச்சி , தொடு ஆட்டம் என அடுக்கி கொண்டே போகலாம்.
அப்படி தெருவில் விளையாடிய காலங்களில் கூட பந்தியானம் திண்டுட்டு திடமாகவும் ஆரோக்கியமாகவும் தான் இருந்தோம்.
இன்றைய குழந்தைகளின் நிலை மற்றும் நாளைய குழந்தைகளின் எதிர்காலத்தை சிந்தித்து பார்க்க கூடிய கட்டாயத்தில் உள்ளோம்.
காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் வரை படிப்பு அதை விட்டால் டிவி. இதுதான் இன்றைய குழந்தைகளின் வளரும் முறை. இதோடு உருவாகிறது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு.
குறிப்பாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை எடுத்து கொண்டால் காலை 5 மணிக்கு எழுந்து பள்ளி செல்கிறார்கள், இரவு 9.30 மணிக்கு வீடு திரும்புகிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு கற்றுகொடுப்பதெல்லாம் இயந்திர வழி கல்வி. தங்கள் பாட புத்தகத்தில் என்ன உள்ளாதோ அதை அப்படியே தேர்வில் எழுதவேண்டும் என்பதுதான் இவர்களுக்கு கொடுக்கும் பயிற்சி.
இந்த பயிற்சி இவர்களின் எதிர்கால வாழ்கை மற்றவர்கள் வகுத்த வழியை தொடர்ந்து பயணிக்க கூடிய நிலை ஏற்ப்படும் என்பது யாருக்கும் ஐயமில்லை. ஆனால் இவர்கள் சுயமாக தன்னிச்சையாக சிந்திக்க கூடாத அளவிற்கு இப்படிப்பட்ட பள்ளி கூடங்கள் இவர்களுக்கு மறைமுகமாக முட்டுக்கட்டை இடுகிறது என்பது வெளிச்சத்திற்கு வராத உண்மை.
இந்த உண்மை மக்களுக்கு (வெளிச்சத்திற்கு) வரகூடாது என்பதற்கு இப்படிப்பட்ட இயந்திர பள்ளிக்கூடம், கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறது. காரணம் பிள்ளைகள் தங்களின் பாட புத்தகத்தை புரிந்து படித்தால் எங்கே தங்களின் பள்ளிகூட ரிசல்ட் விகிதாசாரம் குறைந்துவிடும் என்பதே இதன் காரணம்.
இதில் ஒரு வேதனை என்னவென்றால் 100% இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிகூடன்களே தங்களின் சுய லாபத்திற்காக மாணவர்களின் அறிவை குறுகிய வட்டத்தில் நசுக்கி, அவர்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் அடிமைபோல் நடத்தி தங்களின் பள்ளி பெருமைக்காக மாணவ மாணவியரின் முதுகின் மேல் ஏறி இவர்கள் ( கழுதை போல் இவர்கள் ) குதிரை சவாரி செய்கின்றனர்.
சில பெற்றோர்கள் கூறுவது: இவர்கள் இரவு 9 மணிக்கெல்லாம் வந்தால் டிவி தான் பார்கிறார்கள். எனவே தாமதமாகவே அனுப்புங்கள். (இவர்கள் நாடகம் பார்பதற்காக) பிள்ளைகளுக்கு கொடுக்கும் மன நாம் நேரடியாக பார்க்க முடிகிறது.
சில பெற்றோர்கள் கூறுவது: இவர்கள் இரவு 9 மணிக்கெல்லாம் வந்தால் டிவி தான் பார்கிறார்கள். எனவே தாமதமாகவே அனுப்புங்கள். (இவர்கள் நாடகம் பார்பதற்காக) பிள்ளைகளுக்கு கொடுக்கும் மன நாம் நேரடியாக பார்க்க முடிகிறது.
இதில் நமதூர் பள்ளிக்கூடம் என்று மாருதட்டும் விஸ்டம் மற்றும் அப்துல்லாசா பள்ளி கூடங்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் ஆசியா பள்ளிக்கூடம் மழைக்கு கூட பிள்ளைகளுக்கு விடுமுறை கிடையாது. பிஞ்சு குழந்தைகளுக்கு கூட சுதந்திரமாக விடக்கூடாது என்பதில் இவர்களுக்கு அப்படி என்ன சுதந்திர தாகமோ? தெரியவில்லை. ஆண்டு விழா என்று வந்துவிட்டால் அவர்களின் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஆட்டம், பாட்டம் களியாட்டத்தில் தான் இவர்களின் தொலைநோக்கு பாதை சென்றுகொண்டுள்ளது. அப்படி அறிவு சம்மந்தமான வேலை கொடுப்பார்கலேயானால் அவர்களின் வீட்டில் உள்ளவர்கள்தான் 80% வேலை பார்க்கவேண்டும். இதை பள்ளி கூடத்திலேயே ஆராய்ச்சி கூடம் என்று வைப்பது கிடையாது.
இப்படி பட்ட கல்வி கூடத்தில் படித்து 95% மதிப்பெண் எடுத்தவர்களையும். வெளிநாட்டில் உள்ள 50% மதிப்பெண் எடுத்தவர்களையும், அதன் பாட சம்மந்தமாக விளக்கங்கள் கேட்டால் 95% மதிப்பெண் எடுத்த நம் பிள்ளைகளுக்கு விளக்கம் அளிக்க தெரியாது காரணம் கொட்ட மனப்பாடம் & புரிந்து பாடம் படிக்காமை. இது குழந்தைகளின் தவறு அல்ல. முழுக்க முழுக்க பள்ளி மற்றும் பெற்றோர்களின் தவறு.
பள்ளி மற்றும் பள்ளிகூட நிர்வாகத்திலும் இருப்பவர்களே இப்படி பட்ட சிந்தனையில் இருப்பது தான் வேதனையாக உள்ளது.
இது சம்மந்த பட்டவர்கள் குறிப்பாக நமதூர் வாசிகள் நடத்தும் பள்ளி கூட நிர்வாகிகள், இவற்றையெல்லாம் மாற்றியமைத்து புதிய கல்வி முறையை மாற்றியமைப்பார்களா என்ற ஏக்கத்தில் மாணவ மாணவியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். மதிப்பெண் அதிகம் எடுக்கவில்லை என்று அவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்க வேண்டாம் மாறாக புரிந்து படிக்க வைக்க முயசிப்போம். இன்ஷா அல்லாஹ்...
“ அல்லாஹ்வின் மீது ஆணையாக , கடலில் ஒரு விரலை விட்டு எடுத்தால் எவ்வளவு நீர் அதில் ஒட்டியிருக்குமோ அதுதான் இந்த உலகம். கடல் முழுவதும் மறுவுலகம். அவன் என்ன திருப்பிக் கொண்டு போகப்போகிறான் என்பதை அவன் பார்த்துக்கொள்ளட்டும் ” என்று அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் ஒருமுறை கூறினார்கள். (முஸ்லிம்)
ஆக , இந்தப் பிரம்மாண்ட பூமியில் நம் வாழ்வு முழுவதும் மறுமை என்ற கடலில் ஒரு விரலில் ஒட்டியிருக்கும் தண்ணீர்தான்.
இதில் கவனிக்க வேண்டியது இதுதான். இந்த உலகம் ஓர் எல்லைக்குட்பட்டது , வரையறுக்கப்பட்டது. இந்த உலகத்திற்காகச் செய்யப்படும் எந்தவொரு முயற்சியும் மிகக் குறுகிய கால பலனையே தரும்.
ஆனால் அல்லாஹ்வுக்காக செய்யப்படும் எந்தவொரு முயற்சியும் என்றென்றும் நிரந்தர பலனைத் தரும்.
அல்லாஹ் கூறுகின்றான்.
உங்களிடம் உள்ளவை முடிந்துவிடக் கூடியவையே. அல்லாஹ்விடம் உள்ளவையோ நிலையானவை. (சூரா அந் நஹ்ல் 16 : 96 )
இவ்வுலகிற்காக நாம் முயற்சி செய்கிறோம் என்றால் உடைந்து நொறுங்கிப் போகும் ஒரு கட்டடத்திற்காக உழைக்கிறோம் என்று பொருள்.
மாறாக , அல்லாஹ்வுக்காக நாம் முயற்சி செய்தால் , அல்லாஹ் என்றென்றும் நிலைத்து நிற்பவன் , அவனுக்கு மரணம் என்பது இல்லை.
(பூமியாகிய) அதன் மீதுள்ள அனைத்தும் அழியக் கூடியதே ! மகத்துவமும் கண்ணியமும் மிக்க உமது இரட்சகனின் (சங்கையான) மகமே நிலைத்திருக்கும்.
(சூரா அர் ரஹ்மான் 55:26,27)
எங்கள் சமுதாயதிற்கு படித்த முட்டாள் தேவையில்லை, படிப்பறிவுள்ள சிந்தனையாளர் தான்.
நமது நிருபர்.
நல்ல விசயம் சொல்லி இருக்கிக
பதிலளிநீக்குபாராட்டுக்கள்