1931 ஆம் ஆண்டு காந்தி இலண்டன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றபோது எடுத்த படம்
இவர் தான் எங்கள் முன்மாதிரி என்று வாழ்ந்த மார்டின் லூதர் கிங்.jr முதல் இன்றைய ஒபாமா வரையிலும் தேடிச் சென்ற நோபல் பரிசு, ஏன் நம் கிழவரை இதுவரை நெருங்கவில்லை?
78 ஆண்டுகள் வாழ்ந்த மகாத்மா காந்தி, தனது வாழ்நாளில் ஏறத்தாழ 50 ஆண்டுகள் அமைதி, அறவழியில் போராடி ஆங்கிலேயேர்களைப் பணிய வைத்ததின் மூலம் தன்னை, 20ம் நூற்றாண்டில் தோன்றிய “அமைத்திக்கான தூதுவர்” என்று உலகுக்கு அறிமுகம் செய்து கொண்டவர்.
ஆப்ரிக்காவின் இன/நிற வெறிப் போராட்டமாகட்டும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டமாகட்டும் கத்தியின்றி இரத்தமின்றி வென்று காட்டிய இந்த உத்தமரை உலகமே திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் இந்த ‘நோபல்’ தன் கண்களை மூடிக்கொண்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு வரையிலும் பிரிட்டனைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல் தட்டிக்கழித்து சாக்கு போக்கு சொல்லி வந்த நார்வே, 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது தேர்வுப் பட்டியலை வெளியிட்டது. இல்லை.. இல்லை தன் உள்மனதை வெளியிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை.
“அமைத்திக்கான நோபல் பரிசினைப் பெற்றுக் கொள்ளத் தகுதியானவர் யாரும் உயிருடன் இல்லை ஆகையினால் 1948 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை.” என்பதுதான் அந்த அறிவிப்பு.
இந்த அறிவிப்பு வெளியான சில நாள்களிலேயே காந்தி சுட்டுக் கொல்லப்படுகிறார். நோபல் கமிட்டி சொன்னது போலவே அப்போது உலகில் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற யாரும் உயிருடன் இல்லைதான்.
சரி, இறந்த பிறகாவது காந்தியை நோபல் அடையும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு கிடைத்த செய்தி, “அவரின் கொலையில் நிறைய சிக்கல் இருக்கிறது.” என்று காரணம் காட்டி மழுப்பியது.
இதுவரையிலும் ஐந்து முறை “அமைதி” நிராகரிக்கப்பட்டிருக்கிறது அவர்கள் சொல்லும் ”அமைதி”க்காக!
ஆஃப்கான், ஈராக் ஆகிய இடங்களில் அமைதி(?)யை நிலை நாட்டிய ஒபாமா போன்றோர்தான் நோபல் தேர்ந்தெடுக்கும் அமைதித் தூதுவர்கள்!
எங்கள் காந்தியை துறக்கும் உங்கள் ‘நோபலு’க்கு சாந்தியேது??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக