Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 25 அக்டோபர், 2014

நாட்டை நோக்கி வரும் கொடிய நோய்

நாட்டை நோக்கி வரும் கொடிய நோய்
நாட்டின் அன்னிய முதலீட்டை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த அரசு FDIயை அனுமதிக்கிறது . SENSEX மற்றும் NIFTY புள்ளி இன்று சரிந்தது. இது போன்ற செய்திகளை கேட்கும் போதும் படிக்கும் போது செய்திதாளை அல்லது தொலைகாட்சி சேனலை நாம் மாற்றுவோம்.
இது நமக்கு தேவையில்லாத விடயம் என்று ஒதுங்கி நிற்கிறோம். ஆனால் இது நம்மை நேரடியாக பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக அது நம்மை பாதிக்கும். கம்வுனிஸ்டும் எதிர்கட்சிகளும் இதை பற்றி நிரம்பவே கூறியுள்ளனர் ஆனால் இதை பற்றி விழிப்புணர்வு இளைய சமூகத்திடம் இல்லை. அதை களைய தான் இதை பற்றி இளைய சமூகத்திற்கு விளங்கும் படி எளிய முறையில் எழுதுகிறேன்.
இதை பற்றி தெரியாத மக்கள் கூறுகிறார்கள் ஏன் அன்னிய முதலீட்டை தடைவிதிக்கவேண்டும் துபாய், சிங்கப்பூர், அமேரிக்க, லண்டன் போன்ற நாடுகளில் உள்ள வணிகவளாகம் போல், விலைமலிவான அனைத்து வகையான பொருட்கள் கிடைக்கும். இதனால் நாட்டிற்கு என்ன தீமை ஏற்படபோகிறது என்று.
உண்மை அதுவல்ல இந்த அன்னிய நாட்டின் முதலீட்டால் மிக பெரிய வனிகவளாகம் அமையும் ஆனால் அதனால் மக்களுக்கு எந்த ஒருபயனுமல்ல. இந்தியா 70 முதல் 85 % ஏழைகள் மற்றும் நடுதர மக்கள் வசிகும் நாடு இங்கு பிரம்மாண்ட கட்டிடம், விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் சக்தி அவர்களுக்கு கிடையது.
அன்னிய முதலிட்டால் நாடு முன்னேற்றபாதையில் செல்லும் என்றால் இதை யாரும் எதிர்க்க மாட்டார்கள். அதில் உள்ள திட்டசெயல்பாடு இந்த நாட்டை அடிமையாகவும் வளங்களை கொள்ளையடிக்கும் வகையில் தான் அமைந்து இருக்கிறது. ஏதோ இந்த அன்னிய முதலீடு காங்கிரஸ் அரசால் தான் தொடங்கப்பட்டது அல்ல இதற்கு விதையிட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சிதான். வாஜ்பாய் தலைமையினால் ஆண்ட போது பொது துறையை விற்பதற்காகவே தனி அமைச்சரை நியமித்தவர்கள் இவர்கள். சில்லறை வனிகத்தில் அன்னிய முதலீடும் பொது துறையில் அன்னிய நாட்டின் நுழையிடும் இந்த நாட்டின் மிக பெரிய நோய்.
கடந்த பத்தாண்டு ஆண்ட காங்கிரஸ் அரசாங்கம் இதற்கு சிகப்பு கம்பலமிட்டு வரவேற்றது. தனது மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. தங்கள் மாநிலத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது பற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம், தகவல் ஒலிபரப்பு துறையில் 74 சதவீதம், விமான போக்குவரத்து துறையில் 49 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் 4 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது எனவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிப்பது குறித்து கூறிய முன்னால் பாரத பிரதமர் மன்மோகன் சிங், அன்னிய முதலீடு அனுமதிப்பது எனற முடிவு, பொருளாதார வளர்ச்சிக்காகவும், அன்னிய முதலீடுகளுக்கு ஏற்ற நாடாக இந்தியாவை மாற்றவும் எடுக்கப்பட்டது என்றும். பொருளாதார சீர்திருத்த முடிவுகள் கடுமையான சூழ்நிலைகளில் வேலைவாய்ப்பை பெருக்க உதவும் என்றும். அரசின் இந்த முடிவுகளுக்கு அனைவரின் ஆதரவு தேவை என கூறினார்.’
ஆனால் இந்த அன்னிய முதலீட்டால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகுவது ஏழைகளும் , சில்லறை வியாபாரிகளும் தான். வெளி நாட்டின் நிறுவனங்கள் இந்த நாட்டில் முதலீடு செய்தால் அங்கிருக்கும் சிறு குறு வியாபாரிகள் பாதிப்புள்ளாகிறார்கள். உதாரணம் தமிழகத்தில் கொக்ககோலா பெப்சி போன்ற குளிர்பானங்கள் வருகையால் கலர் சோடா, பன்னீர் சோடா போன்ற குளிர்பாணங்கள் தங்களுடைய விற்பனையை மக்களிடமிருந்து குறைக்கப்பட்டது.
இதை மற்றவேண்டிய அரசு சரியான திட்டத்தை அமல்படுத்தாமல் அலங்கரிக்கபட்ட மக்கள் விரோத திட்டத்தை அமலாக்கம் செய்கின்றனர். உதாரணம்: அதிக சாமானிய மக்கள் கூடும் இடத்தில் நடுதர ஹோட்டல்கள் அதிகம் இருக்கும் அங்கு 1 இட்லியின் விலை 3 என்று எல்லா கடையில் விற்க்கபடுகிறது. ஆனால் அங்கு அரசு 1 ருபாய்க்கு இட்லி என்று விற்பனை செய்தால் அது மக்கள் விரோத செயல்கள் தான் என்று அனைவரும் கூறுவார்கள்.
வால்பார்ட், ரிலையன்ஸ் இது போன்ற நிறுவனங்கள் நுகர்வோரை கவரும் நோக்கத்தில் பிரம்மாண்ட கட்டிடம், கண்னை கவரும் மின் விளக்கு, போன்றவற்றினால் அவர்களிடம் மயக்கத்தை உண்டாக்கி அவர்களை அடிமையாக்கி தங்களுடைய பொருட்களை விற்பனை செய்கின்றனர். நிறுவனங்கள் பெருக பெருக பொருட்களின் தரம் குறைவு ஏற்படும். அதிக இலாபம் கிடைக்க மிக உயர்ந்த பொருட்களை அதிக விலைக்கு விற்க பொருளின் அடக்க விலையை அச்சிட்டு விற்காமல் சுயமாகவே private labelled product என்ற முறையில் அச்சிட்டு விற்பனை செய்கின்றனர்.
இது புறம் என்றால் அந்த நிறுவனத்திற்கு கொடுக்கும் மானியத்தை நினைத்தால் மனம் சற்று கனக்கிறது. இந்த நாட்டின் பசியை போக்க வயலில் இறங்கி கடும் உழைப்பை உணவாக மாற்றும் விவசாயிகளுக்கு கொடுக்கு மனியம் கடந்த ஆட்சியில் 15000 ஆனால் தற்போழுது 2500 ஆக குறைத்துள்ளது. டா.டா நிறுவனம் நானோ கார் உற்பத்தி செய்ய குஜராத் அரசு சுமார் 38,000 ருபாய் மானியமாக கொடுத்தது. இந்தியாவின் பொது துறையான இரயிவே, விமானத்துறை மற்றும் இராணுவம் போன்ற துறைகளில் அன்னிய நாட்டின் தலையீடு வகையில் அதை திறந்துவிட்டுள்ளர்னர். இராணுவத்தில் ஒர் ஃபாசிஸ சக்தி நுழைந்தால் என்ன நடக்கும் என்பது மாலேகான் குண்டு வெடிப்பில் எல்லாருக்கும் தெரிந்தது. அதேப்போல் இன்று அதை அனைவருக்கும் திறந்துவிட்டால் நாடு பல கலவரம் தீவிரவாத செயலை சந்திக்க நேரிடும்.
இந்த நாடு எந்த ஆட்சியாளர்கள் ஆண்டாலும் முன்னேற்ற பாதையில் செல்லாது என்று மனம் வெறுத்து ஒதுங்குவதும் தவறு.ஆகையால் நம்மால் முடிந்த எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அது சிறியதாக இருந்தாலும் சரி நாம் இந்தியர் என்ற உரிமையினால்……

-- ஆரூர்.யூசுப்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக