இந்தியாவில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாடி சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல், கம்பனி என்று தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கி கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக்காதவர்கள்.
.
இன்று ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ, அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர்.
.
தான் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை, மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கு செலவு செய்து உள்ளார். இதுவரை அவர் 17 மில்லியன் டாலர்களை அவர் செலவு செய்து உள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல். முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அப்ரிடியின் மனிதநேய செயலை பாராட்டுவோம்.. வாழ்த்துவோம்..!
ஆனால் இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ஆட்டகாரரர்கள் என்ன செய்ய போகிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்குவார்கள். அதில் புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்ச கணக்கில் பீஸ் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத்தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழுவதும் கமிசன் பெறுவார்கள். இது தானே நடந்து கொண்டு இருக்கிறது.
நன்றி கல்லாறு.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக