கிரிக்கெட் பின்னணியில் உள்ள அரசியல், அதில் ஆதிக்கம் செலுத்தும் சாதி உணர்வு, அரசியல் மற்றும் சாதியால் திறமையானவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது ஜீவா.
இலட்சியப் பாதைகள் புறக்கணிக்கப்படுவதால் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் விபரீத முடிவுகள், அவர்களின் கனவுகள் சிதைந்த போது தேர்ந்தெடுக்கும் முடிவுகள் ஆகியவற்றை யதார்த்தமாக வடித்துள்ள இயக்குனர் சுசீந்திரனுக்கு ஒரு சபாஸ் போடலாம்.
கிரிக்கெட்டில் நடக்கும் ஊழலைப் பற்றிப் பலரும் படமெடுத்துள்ளார்கள். ஆனால் அதில் ஆதிக்கம் செலுத்தும் சாதி உணர்வைப் பற்றி யாருமே பேசிய தில்லை. அதைப் பேசத் துணிந்த இயக்குநர் சுசீந்திரன் பாராட்டுக் குரியவர்.
நன்றாக விளையாடியவனின் முதுகை அதிகாரி தடவிப் பார்க்கும் காட்சி தமிழ்த் திரையுலகில் இதுவரை காணப்படாதது. “அவர் தட்டிக்கொடுக்கிறார்னு நெனைச்சேன், ஆனா அவர் தடவிப் பார்த்தாருன்னு அப்புறம்தான் புரிஞ்சுது” என்னும் வசனம் கிரிக்கெட்டில் குடிகொண்டிருக்கும் சாதியத்தை சொல்லி விடுகிறது.
கதை: மட்டையை எடுத்துக்கொண்டு தெரு வில் இறங்கும் கோடிக்கணக்கான சிறுவர்களுக்கு இருக்கும் ஆசைதான் ஜீவாவுக்கும் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கரைப் போல ஆக வேண்டும் என்பதுதான் அவன் கனவு. கிரிக்கெட் கனவுகளுடனும் தீவிரமான பயிற்சியுடனும் வளர்கிறான் ஜீவா.
ஏழு வயதில் தொடங்கும் அவனது கிரிக்கெட் ஆர்வம், அவன் இளைஞனாகும் போது தந்தையின் மறுப்பு மற்றும் காதலால் பெவிலியனுக்குத் திரும்புகிறது.
காதல் தோல்வி குடியை நோக்கி திருப்பிய வேளையில், தந்தையின் கிரிக்கெட் மறுப்பு விலகவே, கிரிக்கெட் வாசலை மீண்டும் திறக்க வழிசெய்கிறது.
கிரிக்கெட்டில் மளமளவென்று வளர்ச்சி. ரஞ்சி அணியில் இடம்பெறும் அவனும் நண்பன் ரஞ்சித்தும் களத்துக்கு வெளியே எதிர்பாராத நெருக்கடியை எதிர்கொள்ள, அவர்கள் கனவுப் பாதை அரசியல், சாதிய ஆதிக்கத்தால் சிதிலமாகிறது. ஆடுகளம் சார்ந்த அவர்களது லட்சியப் பயணத்தில் யாரெல்லாம் விளையாடுகிறார்கள், இறுதியில் லட்சியத்தை அடைய முடிந்ததா என்பதை போரடிக்காமல் சொல்கிறார் இயக்குநர்.
படத்தில் ஜீவாவாக விஷ்ணுவும், ஜெனியாக ஸ்ரீதிவ்யாவும், நாயகன் நண்பர்களாக ரஞ்சித்-லஷ்மண், டேவிட்-பரோட்டா சூரியும் நடித்துள்ளனர்.
நன்றி நியூஇந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக