லண்டன்: கரு முட்டை மாற்று சிகிச்சை முறையில் முதல்குழந்தை பிறந்துள்ளது. இந்நிகழ்ச்சி மருத்துவ துறையி்ல் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் குழந்தைபேறு கிடைக்காத தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக வாடகை தாய் மூலமாக குழந்தையை பெற்றெடுத்து வந்தனர்.இந்த நிலையை மாற்றும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்தனர். அதன் முயற்சியின் பலனாக கருமுட்டையை தானமாக பெற்ற பெண் ரருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
சுவீடனை சேர்ந்த தம்பதியினர் நீண்ட நாட்களாக குழந்தைபேறு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து டாக்டர்கள் ஆலோசனை மற்றும் பரிசோதனை முயற்சியாக கருமுட்டையை தானமாக பெற்று குழந்தையை உருவாக்க முயற்சி செய்தனர். இதற்கு தம்பதியினரும் ஒப்புக் கொண்டனர். மருத்துவர் பிரான்ஸ்ட்ரோம் தலைமையிலான குழுவினர் பரிசோதனை முயற்சியை மேற்கொண்டனர். இதற்காகதம்பதியின் உறவினர் ஒருவரிடம் இருந்து கரு முட்டை தானமாக பெறப்பட்டது. தொடர்நது குறிப்பிட்ட பெண்ணிற்கு பொருத்தப்பட்டது. கடந்த ஒராண்டுக்கு முன்னதாக இந்நிகழ்வு நிகழ்த்தப்பட்டது. தற்போது அப்பெண் அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக கூறிய மருத்துவர்,இந்நிகழ்வு மருத்துவ உலகி்ல் மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் என தெரிவித்தார். மேலும் குழந்தை பிறந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தந்தை மருத்துவரின் ஆலோசனையின் படி காத்திருந்ததற்கு ஏற்ற வகையில் தக்க பலன் கிடைத்துள்ளது எனவும், இத்தருணம் மிக்க மகிழ்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற ஆய்வுகளை இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ்,துருக்கி உட்பட பல்வேறு நாட்டு மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகி்ன்றனர். இருப்பினும் ஆய்வுகள் முழுமையைடைந்த தாக தகவல்கள் இல்லை . தற்போது கிடைத்துள்ள வெற்றி மருத்துவ உலகி்ல மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என பிரான்ஸ்ட்ரோம் கூறினார்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக