Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 அக்டோபர், 2014

உதான்"பயிற்சி ...


"உதான்"பயிற்சித் திட்ட தொடர்பு மையங்களை அதிகரிக்க வேண்டும்: முதல்வர் ஓ.பி.எஸ். கோரிக்கை! Posted by: Mathi Published: Wednesday, October 29, 2014, 15:44 [IST]இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க     ஷேர் செய்ய   ட்வீட் செய்ய   ஷேர் செய்ய    கருத்துக்கள்  மெயில் சென்னை: ஐ.ஐ.டிஎன்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கான மத்திய அரசின் "உதான்" பயிற்சித் திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்ப காலத்தை ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எழுதிய கடித விவரம்: திறமைமிக்க மாணவிகள் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.க்கள்) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங் கள் (என்.ஐ.டி.க்கள்) போன்றவற்றில் சேர்ந்து படிப்பதற்காக தேர்வு எழுத 'உதான்என்ற புதிய திட்டத்தை 'சி.பி.எஸ்.இ.அறிவித்துள்ளதை அறிவேன். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து கல்வி வாரியங்களில் படிக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஐ.ஐ.டி.க்கள் மற்றும் என். ஐ.டி.க்களில் சேர சிறப்பு ஆன்லைன் மூலம் நேரடி பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கான விண்ணப்ப படிவம் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள தொடர்பு மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகரங்களில் மட்டுமே அந்த மையங்கள் உள்ளன. கல்வித்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இங்கு இந்த திட்டத்தின் கீழ் மாணவிகள் அதிக அளவில் தகுதிபெற வாய்ப்புகள் உள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள 151 தொடர்பு மையங்களில் தமிழ்நாட்டுக்கு மட் டுமே வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களுக்கு பல மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக அளவில் மாணவிகளை கொண்ட பெரிய மாநிலமான தமிழகத்துக்கு மையங்கள் மட்டும் போதுமானது அல்ல. மேலும் தொடர்பு மையங்களுக்கு செல்ல நீண்ட தூரம் பயணம் செய்ய அச்சம் நிலவுவதால் தகுதியான மாணவிகள் பங்கேற்பது குறையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தமிழ்நாட்டில் சென்னை மிகப்பெரிய நகரமாகும். மெட்ரோ பாலிடன் நகரமான அது தொடர்பு மைய பட்டியலில் இடம் பெறவில்லை. தகுதியான மாணவிகள் பலர் பங்கேற்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களிலும் தொடர்பு மையங்கள் அமைக்க வேண்டும். எனவே உதான் திட்டத்தில் மாணவிகள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் தமிழ்நாட்டில் சென்னையை சேர்த்து அதிக இடங்களில் தொடர்பு மையம் அமைக்க வேண்டும். மேலும் அதிக அளவில் மாணவிகள் சேரும் வகையில் அதற்கான விண்ணப்பம் செய்ய காலத்தை வருகிற நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அக்கடிதத்தில் கூறியுள்ளார். 
மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மொய்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக