பெங்களூரு கோர்ட் உத்தரவால் தமிழகம் முழுவதும் அதிமுக ஏற்படுத்திய கலவரத்தில் சேதபடுத்தபட்ட சொத்துக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளரிடம் வசூலிக்கவேண்டும் என வழக்கு தொடுக்கபட்டுள்ளது.
இதே போல் பாமக பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த போது அதன் நஷ்ட ஈட்டை அந்த கட்சியே வழங்க வேண்டும் என அப்போதைய முதல்வர் (ஜெஜெ) சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.இது வரவேற்க கூடியதாகவும் முதல்வரின் சட்டம் ஒழுங்கு விஷயத்தை கட்டுபடுத்துவதன் துணிவையும் பாராட்டிப்படியான செயலாக அமைய பெற்றது.
இப்போது காலத்தின் சுழற்சியால் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.சம்பவம் அதேதான் சட்டம் இயற்றியவர் சிறைக்குள் சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் கட்சிக்காரர்கள்.ஆட்சியிலும் அக்கட்சியே.இப்போதைய முதல்வர் என்ன மாதிரியான வீரதீர சாகசம் புரிய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
முகநூலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக