Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 21 அக்டோபர், 2014

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வலியுறுத்தல்!

லக்னோ: அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலை கட்ட மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் சுரேஷ் பையாஜி ஜோஷி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது,
“மூன்று நாட்கள் செயற்குழுவில் ராமர் கோவில் பிரச்சினை பற்றி விவாதித்தோம். அயோத்தியில் ராமர் கோவில் ஏற்கனவே உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சென்று வழிபட்டு வருகிறார்கள். பூஜை செய்யப்படுகிறது. அந்த கோவிலை பிரமாண்டமாக மாற்றிக் கட்ட வேண்டும் என்பதுதான் இந்துக்களின் விருப்பம். இந்த பிரச்சினை, சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது.
இது பற்றி பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. எனவே, வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நரேந்திர மோடி அரசு, இப்பிரச்சினையில் உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றி, ராமர் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்து நாடெங்கும் பெரும் வகுப்புக் கலவரம் மூண்டதும், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானதும், பல கோடி மதிப்புள்ள சொத்துகள் அழிந்ததும் நினைவிருக்கலாம். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். ராமர் கோவில் விவகாரத்தை மீண்டும் கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக