சிறப்புடன் நடந்தது. டேரா துபை ஈத்காவில் நடந்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையில் நமதூர் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இங்குள்ள அதிகபட்ச பள்ளிவாசல்களில் பெருநாளுக்கான தொழுகை நடத்தப்பட்டாலும், துபை டேரா பகுதியில் வசிக்கும் நமதூர் சகோதரர்கள் அநேகமானோர்களும் மற்றும் பிற ஊர்க்காரர்களும், பிற நாட்டவர்களும் இங்குள்ள ஈத்கா மைதானத்தில் தொழுவதற்கு விரும்பி வருவார்கள். காரணம் அனைத்து நண்பர்கள் சொந்தபந்தங்களை ஒன்றாக ஓரிடத்தில் சந்தித்து பெருநாள் வாழ்த்தினை பகிர்ந்து கொள்ள ஏற்ற இடமாக நகருக்கு மத்தியில் இந்த டேரா ஈத்கா மைதானம் அமைந்துள்ளது.
இஸ்லாமிய வரலாற்றுக்கு ஒரு மகத்துவம் உண்டு.உரைகளின் மூலம் கேட்டு உணர்ச்சி வசப்படுவதோ, பக்தி பரவசமோ அல்ல.நிகழ்கால சூழலுக்கு ஏற்றவாறு நமது வாழ்க்கையில் அமல்படுத்துவதற்கான பாடங்களாகும்.இப்ராஹீம் நபி(அலை) அவர்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் நமது வாழ்க்கையிலும் மலரவேண்டும்!அத்தகையதொரு வல்லமையை அல்லாஹ் நம் அனைவருக்கு தந்தருள்வானாக!அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா முபாரக்!நம் அனைவரது நற்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!
தகப்பல்லாஹு மின்னா வ மின்கும்
தகப்பல்லாஹு மின்னா வ மின்கும்
புகைப்படம் முகநூலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக