புனித ஹஜ் எனும் கடமையை நிறைவேற்ற உலகெங்கிலுமிருந்து பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் புனித மக்கா நகரம் செல்கின்றனர்.
ஹஜ்ஜின் முக்கிய நாட்களில் ஒன்று அரஃபா தினம். இந்நாளில் அனைத்தும் முஸ்லிம்களும் இன நிற மொழி உடை பேதமின்றி வெள்ளாடை அணிந்தவர்களாக ஒரே இடத்தில் ஒன்று கூடி ”லப்பைக் அல்லாஹீம்ம லப்பைக்” என்று தல்பியா கூறியவர்களாக ஏக இறைவனை போற்றுவதாகும்.
நேற்று (3.10.2014) அரஃபா தினமாகும். 25 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேற்று இரவு முதல் அரபாவில் ஒன்று கூடலாயினர். அந்தி சாயும் வரை தங்கியிருந்து இறைவனை போற்றுவதோடு பிராத்தனைகளிலும் ஈடுபட்டனர். மஸ்ஜித் நமீராவில் அரஃபா தினத்தின் குத்பா உரை நடத்தப்பட்டது. இந்த குத்பா உரையை சவுதி பேரறிஞர் அப்துர் ரஹ்மான் ஆலு சேக் அவர்கள் நடத்தினார்கள்.
அரஃபாவில் இந்திய மக்களுக்கு சேவைகள் புரிவதற்காக இந்தியா பிரடர்னிடி போரத்தின் நூற்றுக்கும் அதிகமான தன்னார்வ தொண்டர்கள் முஜீப் தலைமையில் ஒன்று கூடினர்.
இந்திய ஹாஜிகளை இரயில் நிலையங்களிலிருந்து அரபாவின் கூடராங்களில் கொண்டு சேர்ப்பது. வழி தவறியவர்களை அவர்களுக்குரிய கூடாரங்களுக்கு கொண்டு சேர்ப்பது. முதியோர்களை சக்கர நாற்காலி மூலம் உதவுவது என தங்களது சேவைகளை திறம்பட செய்தனர்.
மேலும் ஹாஜிகளுக்கு தேவையான வழிகாட்டல்களை அவர்களின் சொந்த மொழியிலேயே கொடுத்தனர்.
மேலும் ஹாஜிகள் நேற்று இரவு அரஃபாவிலிருந்து முஸ்தலிபாவிற்கு சென்றனர், இரவில் தங்கி காலை மினாவிற்கு திரும்பினர். முஸ்தலிபாவிலும் இந்தியா பிரடர்னிடி போரத்தின் (IFF) தன்னார்வ தொண்டர்கள் ஹாஜிகளுக்கு உதவினர்.
இந்திய தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் இந்த சேவையை இந்திய தூதரகம், மக்கா ஹஜ் கமிட்டி அமைப்பாளர்கள் மற்றும் ஹாஜிக்கள் பெருமளவில் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக