Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 2 அக்டோபர், 2014

பிர்தவ்ஸ் ராஜகுமாரன்...

பிர்தவ்ஸ் ராஜகுமாரன்...
நிகழ்கால இஸ்லாமிய சமூகத்தின் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய சிறந்த எழுத்தாளர்...கதாசிரியர்..இலக்கியவாதி.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிர்தவ்ஸ் ராஜகுமாரன் 20 வருடங்களுக்கு முன்னாலேயே எழுத்துத் துறைக்கு வந்தவர். பிரபலமான இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன .அரசுப் பணியில் இருந்து கொண்டே எழுத்துப் பணியும் செய்வது இவரது தனிச் சிறப்பு. கதைகள் எழுதிக் கொண்டிருந்தவரை அரசியல் சமூக விழிப்புணர்வு கட்டுரைகள் எழுத வைத்ததில் எனக்கும் பங்குண்டு. " நமது முற்றத்தில்" இவர் எழுதிய கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை பெற்றன. இன்று முக்கியமாகப் பேசப்படும் அப்சல்குரு, மதானி, காஷ்மீர், இஸ்ரேல், குஜராத் பிரச்சனைகளை அப்போதே அனல் பறக்க விமர்சித்து கட்டுரைகள் எழுதிய துணிச்சல் மிக்கவர். ஏராளமான ஜனரஞ்சக இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
" நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம்போல "
என்ற சிறுகதைத் தொகுப்பில் கோவையில் நடைபெற்ற மதக் கலவரத்தின் கொடூர முகத்தை உள்ளது உள்ளபடி அப்படியே வரி வடிவில் கொண்டு வந்து, கண்களில் ரத்தக் கண்ணீரை வரவைக்கிறார் பிர்தவ்ஸ். இது சங்கப் பரிவாரங்களின் நிஜ முகங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.
கலவரம் நடந்த கோவை வீதிகளில் நாம் உயிர் பதைபதைக்க ஓடக்கூடிய உணர்வு இந்தக் கதைகளை படிக்கும் பொது ஏற்படுகிறது. வெறியர்களால் குத்திக் கொல்லப்படும் முஸ்லிம்களின் வயிற்றிலிருந்தும் நெஞ்சிலிருந்தும் பீறிட்டுப் பாயும் ரத்தம் நம் மூஞ்சியில் தெறித்து நம்மை மூர்ச்சையடைய வைக்கிறது.
தன் கண்முன்னே நடந்த கொடூரமான இனப்படுகொலையின் ஒரு சில சம்பவங்களை மட்டும் இயல்பான முறையில் சொல்லி நம்மை இதயம் கனக்க வைக்கிறார் பிர்தவ்ஸ்.
தொடர்ந்து பல நூல்களையும் எழுதியிருக்கும் இவர் "Firthouse Rajakumaaren "
என்ற பெயரில் முக நூலிலும் எழுதி வருகிறார்.
இவரதுஎழுத்துப் பணிகளும் இலக்கியப் பணிகளும் மென்மேலும் சிறந்து சமுதாயத்திற்கு நலம் பயக்க இறையை வேண்டி வாழ்த்துகிறேன்.
@ படத்தில் நானும் பிர்தவ்ஸும்....மற்றும் அவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக