அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
முஆவியா இப்னு ஹய்தா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவரிடம் அவரது மனைவியின் உரிமைகள் என்ன? என்று கேட்டேன். நீ சாப்பிடும் போது அவளையும் நீ சாப்பிடச் செய்ய வேண்டும். நீ (புதிய ஆடை) உடுத்தும் போது அவளுக்கு நீ உடுத்தக் கொடுக்க வேண்டும் முகத்தில் அடிக்காதே! இழிவாக பேசாதே! வீட்டிலேயே தவிர அவளைக் கண்டிக்காதே! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 277)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''''இறை விசுவாசிகளில் நம்பிக்கையால் முழுமை பெற்றவர், அவர்களில் அழகிய குணமிக்கவர்தான். உங்களில் சிறந்தவர், மனைவியரிடம் சிறந்தவராக நடந்தவர் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ. இது ஹஸன் ஸஹுஹ் என்று திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 278)
அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''''உலகம் (சிறிது காலத்திற்கு) சுகமளிக்கும் ஒன்றாகும். இந்த சுகப்பொருட்களில் சிறந்தது, நல்ல மனைவியாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 280)
இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'''' நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் அவரது பொறுப்புப்பற்றி கேள்வி கேட்கப்படுவீர். ஒரு தலைவர் பொறுப்பாளியாவார். ஒரு மனிதர், தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளியாவார். ஒரு பெண் தன் கணவனின் வீடு, மற்றும் குழந்தைக்கு பொறுப்பாளியாவாள். நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் தன் பொறுப்புப் பற்றி கேள்வி கேட்கப்படுவீர்'''' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 283)
''''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''''. நூல்: புகாரி,முஸ்லிம்)
'''' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''''

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக